world

img

இன்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்

வாஷிங்டன், நவ. 4 - அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக் கான வாக்குப்பதிவு இன்று (நவ. 5) நடைபெறுகிறது. 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், மொத்தம் 18.65 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் வயதானவர்கள் உள்ளிட்ட 7.8 கோடி அமெரிக்கர்கள் ஏற்கெனவே வாக்க ளித்து விட்ட நிலையில், அதிகாரப் பூர்வ தேர்தல் செவ்வாயன்று நடை பெறுகிறது.

இந்நிலையில், அமெரிக்க வாக்கா ளர்கள், தங்களின் முக்கியப் பிரச்சனை யாக எதனைக் கருகின்றனர் என ‘பியூ’ ஆராய்ச்சி மையம் ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளி யிட்டுள்ளது. இதில், பொருளாதாரப் பிரச்சனைகளே அமெரிக்க வாக்கா ளர்களின் முக்கியப் பிரச்சனையாக முன்னுக்கு வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஆய்வின்படி, பத்து வாக்காளர் களில் எட்டு பேர் பொருளாதாரமே முக்கிய பிரச்சனை என கருதுகின்ற னர். ‘கால் அப்’ நிறுவனத்தின் ஆய்வி லும் பயங்கரவாதம், அகதிகள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 22 பிரச்சனை களில் பொருளாதாரமே முதன்மை யான பிரச்சனையாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

2024 ஏப்ரலில் அமெரிக்கர்களின் வீட்டுச் செலவுகள் வரலாறு காணாத  உயர்வைக் கண்டுள்ளது. செப்டம்ப ரில் மட்டும் வீட்டு வாடகை 3.3  சதவிகிதம் உயர்ந்துள்ளது. வாடகை வீடுகளில் வசிப்போரில் 50 சதவிகிதம் பேர் தங்கள் வருமானத்தில் 30 சத விகிதத்தை வாடகைக்காக செலவிடு கின்றனர்.

2020 செப்டம்பருடன் ஒப்பிடுகை யில் 2024 செப்டம்பரில் உணவுப் பொருட் களின் விலை 25 சதவிகிதம் அதி கரித்துள்ளது. 2009-க்குப் பின்  குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்பட வில்லை. தற்போது மணிக்கு 7.25 டாலர் (609 ரூபாய்) ஊதியம் கிடைத்தா லும், அமெரிக்காவில் நிலவும் பண வீக்கத்தைச் சமாளிக்க இந்த ஊதியம் போதுமானதாக இல்லை என்கின்ற னர் பொருளாதார வல்லுநர்கள்.

டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இரு வேட்பாளர்களும் பொரு ளாதார பிரச்சனைகளுக்கு உண்மை யான தீர்வுகளை முன்வைக்கவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்துள் ளன. முந்தைய பைடன் நிர்வாகமும் வாக்குறுதியளித்த பல சமூக திட்ட ங்களை செயல்படுத்த தவறிய தாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப் பட்டுள்ளன.