வாஷிங்டன்,ஜன.17- அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது இஸ்ரேல்-காசா போரில் அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை குறித்து கேள்வி எழுப்பிய பத்தி ரிகையாளர் சாம் ஹுசைனியை அமை ச்சரின் பாதுகாவலர் கள் அடாவடியான முறையில் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளி யேற்றியுள்ளனர். பிளிங்கன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு பைடன் தலைமை யிலான அமெரிக்க அரசு தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவு குறித்து பத்திரிகையாளர் சாம் ஹூசைனி கேள்வி எழுப்பினார். இதற்கு அரசின் செயலை மதிக்க வேண்டும் என பிளிங் கன் பதில் கூறினார். இதனைத்தொடர்ந்து மீண்டும் பேசிய ஹுசைனி, சர்வதேச பொது மன்னிப்பு ஸ்தாபனம் (அம் னஸ்டி இன்டர்நேஷனல்) உள்ளிட்ட அமைப்புகள் முதல் சர்வ தேச குற்றவியல் நீதிமன்றம் வரை அனைவரும் இஸ்ரேல் காசாவில் பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்கின் றது என கூறுகின்றனர். இதனை தான், நீங்கள் மதிக்கச் சொல்கிறீர்களா என கேள்வி எழுப்பினர். உடனடியாக அவரை அமைச்சரின் பாதுகாவலர்கள், குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். அப்போது அமெ ரிக்காவில் பத்திரிகை சுதந்திரத்தைப் பற்றி புகழ்ந்து பேசி வரும் நீங்கள் இவ்வாறு செய்வது நம்நாட்டில் பத்திரிகை சுதந்திரத்தின் வீழ்ச்சியை தான் எடுத்துக்காட்டுகிறது என சத்தமிட்டார் சாம். மேலும் பிளிங்கன் ஒரு “குற்றவாளி” என்று கோஷமிட்டார். மேலும் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் குற்றவாளிக்கூண்டில் நீங்கள் ஏன் ஏறவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.