tamilnadu

அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் முற்றுகை

அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் முற்றுகை

ராஜேந்திரா நகர் பகுதியில் குடிநீர், சாலை, குப்பை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கோரி 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 2 ஆவது வார்டில் ராஜேந்திரா நகர் உள்ளது. இங்கு 800 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த 12 வருடங்களாக முறையான சாலை வசதி, கழிவுநீர் வடிகால் வசதி இல்லை. குப்பைகள் சரவர அகற்றப்படுவதில்லை. குடிநீர் விநியோகமும் முறையாக வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், குடிநீர் வரி கட்டவில்லை என நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை வியாழனன்று முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஒரு வாரத்திற்குள் குடிநீர் முறையாக விநியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாகவும், குப்பைகள் அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். மேலும் சாலை வசதி மற்றும் கழிவு நீர் வடிகால் அமைக்க விரைவில் நிதி பெற்று செய்துகொடுப்பதாகவும் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

கொடிவேரி சுற்றுலாத் தலத்தில் மாண வர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் தனியார் பள்ளி சார்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலைத் திறனை இயற்கையோடு ஒன்றிணைந்து வளர்க்கும் வகையில் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி சுற்று லாத் தலத்தில் புதன்று ஓவியப் போட்டி நடை பெற்றது. இதில் கொடிவேரி சுற்றுலாத் தலத்தில் கட்டப்பட்டுள்ள அணை, வாய்க் கால் அமைப்பு, பரிசல் சவாரி செய்தல், பூங் காவில் உள்ள மரம், செடி வகைகள் மற்றும் இயற்கை காட்சிகளை மாணவ, மாணவிகள் நேரில் பார்த்து வரைந்தனர். இப்போட்டியில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை  தனித்திறனில் சிறந்து விளங்கிய 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட னர். இதுகுறித்து அப்பள்ளியின் ஆசிரியர்கள் கூறுகையில், இன்றைய சூழலில் மாணவ, மாணவிகளின் தனித்திறனை வெளிப்படுத்த பள்ளிகள் சார்பில் பல்வேறு பயிற்சிகள்  வழங்கி போட்டிகள் நடத்தி வருகின்றனர்.  வகுப்பறையின் நான்கு சுவர்களுக்கு மத்தி யில் நடைபெறும் ஓவியப் போட்டிக்கும் இயற்கை எழில் மிகுந்த இடங்களில் நடை பெறும் போட்டிகளுக்கும் வித்தியாசம் உள் ளது. இயற்கையோடு ஒன்றிணைந்து மாணவ, மாணவிகள் ஓவியம் வரையும்போது மாண வர்களிடையே சிந்திக்கும் திறன் வெளிப் படும். இதுவே வகுப்பறையில் நடைபெறும் ஓவியப் போட்டிகளில் சிந்திக்கும் திறன் வெளிப்படுத்துவது குறையும். எனவே இயற்கை காட்சிகள் நிறைந்த பகுதியில் நடை பெறும் ஓவியப் போட்டியில் மாணவ, மாண விகளுக்கு கலைத்திறன் வெளிப்படும்” என்றனர்.