ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கை
தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கோவை மண்டல மாநாட்டுக்கான தயாரிப்பு கூட்டம் கோவையில் வியாழனன்று நடை பெற்றது ஒன்றிய அரசு 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு சட்டத் தொகுப்பு களாக மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை, நீல கிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் மண்டல திறந்த வெளி மாநாடு கோவையில் ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக் கான தயாரிப்புக் கூட்டம் வியாழ னன்று சிங்காநல்லூர் திருச்சி சாலை யில் உள்ள கோவை ஜில்லா பஞ்சா லைத் தொழிலாளர் சங்க (HMS) அலு வலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு எச்எம்எஸ் மாநிலத் தலைவர் டி.எஸ்.ராஜாமணி தலைமை தாங்கினார். சிஐடியு கோவை மாவட் டத் தலைவர் கே.மனோகரன், மாவட் டச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, சிஐடியு நீலகிரி மாவட்டச் செயலாளர் வினோத், மாவட்டத் தலைவர் சங்கரலிங்கம், திருப்பூர் மாவட்டச் செயலாளர் சம்பத், பொரு ளாளர் கந்தசாமி, ஏஐடியுசி மாவட் டத் தலைவர் கே.எம்.செல்வராஜ், மாவட்டச் செயலாளர் சி.தங்கவேலு, எச்எம்எஸ் சார்பில் மனோகரன், எல்பிஎப் சார்பில் துரை, ஐஎன்டியுசி சார்பில் புவனேஸ்வரி, எம்எல்எப் சார்பில் தியாகராஜன், எல்டியுசி சார் பில் ஜெயபிரகாஷ், ஏஐசிசிடியு உட் பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகி கள் கூட்டத்தில் கலந்து கொண்ட னர்.