headlines

img

பிரிக்ஸ்: புதிய புவி அரசியல் சக்தி

பிரிக்ஸ்: புதிய புவி அரசியல் சக்தி

ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற 17-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு, உலகளாவிய அரசியல் பொருளாதார அமைப்பில் நிகழ்ந்துகொண்டிருக் கும் மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. உலக மக்கள்தொகையில் 50% மற்றும் பொருளாதார உற்பத்தியில் 25% பங்கு வகிக்கும் இந்தக் கூட்ட மைப்பு, அமெரிக்க ஆதிக்கத்திற்கு நேரடியான சவால் விடுக்கும் நிலைக்கு வந்துள்ளது.

“உலக தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, மேலும் உள்ளடக்கிய மற்றும் நிலை யான ஆட்சிமுறைக்காக” என்ற இம்முறையின் கருப் பொருள், பிரிக்ஸின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. பிரேசில் ஜனாதிபதி லூலா வின் “கச்சாப் பொருட்கள் சப்ளையர்களாக மட்டும் இருக்கமாட்டோம்” என்ற உறுதியான அறிவிப்பு, தெற்குலக நாடுகளின் புதிய தன்னம்பிக்கையை பிரதிபலிக்கிறது. காலனித்துவ மற்றும் புதிய கால னித்துவக் கொள்ளைக்கு உட்பட்ட நாடுகள், இன்று தங்கள் வளர்ச்சியின் திசையை தாங்களே தீர்மானிக்கும் உரிமையை உறுதியாக கோருகின்றன. 

டாலர் ஆதிக்கத்திற்கு எதிரான உள்நாட்டு கரன்சிகளின் பயன்பாடு, மாற்று உலகளாவிய நிதி அமைப்பை உருவாக்கும் திசையில் முக்கிய முன்னெடுப்பாகும். பொலிவியா, மலேசியா போன்ற நாடுகளின் இத்திசையிலான வலியுறுத் தல், அமெரிக்க டாலரின் ஏகபோகத்திற்கு எதிரான பரந்த அளவிலான அதிருப்தியை தெளிவாக்கு கிறது. ரஷ்யா-சீனா இடையிலான ரூபிள்-யுவான் வர்த்தகம், இந்தியா-ரஷ்யா இடையிலான ரூபாய்-ரூபிள் பரிமாற்றம் ஆகியவை டாலர் ஏகாதிபத்தியத்திற்கு நேரடியான சவால்களாக உருவெடுத்துள்ளன.

டிரம்பின் 100% காப்பு வரி அச்சுறுத்தலுக்கு பிரிக்ஸ் நாடுகள் அஞ்சாமல் நிற்பது, அவர்க ளின் ஒன்றுபட்ட வலிமையை காட்டுகிறது. அமெ ரிக்கா தனது ஏகாதிபத்திய நிலையை காப்பாற்ற பயன்படுத்தும் பொருளாதார மிரட்டல்கள், இன்று பிரிக்ஸ் நாடுகளின் கூட்டு எதிர்ப்பைச் சந்திக்கின் றன. 10 புதிய கூட்டாளி நாடுகளின் இணைப்பு, பிரிக்ஸின் விரிவடையும் செல்வாக்கை உறுதிப் படுத்துகிறது. இந்தோனேசியா, எத்தியோப்பியா, ஈரான், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் முழு உறுப்பினர் அந்தஸ்து, ஆசிய, ஆப்பிரிக்க, மத்தியகிழக்கு பிராந்தியங்களில் பிரிக்ஸின் ஆழமான வேர்களை நிரூபிக்கிறது.

உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறும் அமெரிக்க காப்பு வரி நடவடிக்கைகளை பிரிக்ஸ் நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

“மோதலை அல்ல, மக்கள் மற்றும் வளர்ச்சியை மையமாகக் கொண்ட உலக ஒழுங்கமைப்பு” என்ற லூலாவின் தொலைநோக்குப் பார்வை, ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிரான புதிய உலகளாவிய மாற்றுமுறையின் அடித்தளமாக அமைந்துள்ளது. 

பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் 31 பக்க பிரகடனம், மத்தியகிழக்கு மற்றும் உக்ரைன் பிரச்சனைகளில் மேற்கத்திய நாடுகளின் இரட்டை நிலைப்பாட்டை கூர்மையாக சுட்டிக்காட்டுகிறது. பிரிக்ஸ் இனி வெறும் பொருளாதார அமைப்பு அல்ல; அது பல் துருவ உலகின் நம்பிக்கையூட்டும் அடையாளமாக மாறியுள்ளது.  இந்தக் கூட்டமைப்பு, 21-ஆம் நூற்றாண் டின் மிக முக்கியமான புவியியல்-அரசியல் சக்தி யாக உருவெடுத்துள்ளது என்றால் மிகையல்ல.