articles

img

பொறுத்தது போதும்! - ச.வீரமணி

பொறுத்தது போதும்!

ஜூலை 9 அன்று நடந்த வரலாற்று சிறப்பு மிக்க வேலைநிறுத்தத்தில் கோடிக்க ணக்கான உழைக்கும் மக்கள் வீதிகளில் இறங்கினர். முன்னதாகவே திட்டமிடப்பட்டிருந்த இந்த வேலைநிறுத்தம், பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குத லைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்க ளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனினும், மக்கள் மீது திணிக்கப்பட்ட தொழிலாளர் விரோதக் கொள்கைக ளுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வு சிறிதும் குறைய வில்லை என்பதையே நடைபெற்றுள்ள வேலை நிறுத்தும் மெய்ப்பித்துள்ளது.

44 தொழிலாளர் சட்டங்களை  சிதைத்த ஒன்றிய அரசு

அரசாங்கம் மூன்று முக்கிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை, அதாவது தொழில் உறவுகள் தொகுப்பு (Industrial Relations Code), தொழில் பாதுகாப்பு தொகுப்பு (Occupational Safety Code) மற்றும் சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் தொகுப்பு (Health and Working Conditions Code) ஆகியவற்றையும்; தொடர்ந்து சமூகப் பாதுகாப்பு தொகுப்பு (Social Security Code) என்று - மொத்தம் நான்கு தொகுப்புகளையும் இயற்றிய போது இந்தப் போராட்டம் உத்வேகம் பெற்றது. 2019 ஊதியங்கள் சட்டத் தொகுப்பும் (2019 Wages Code) மற்றும் இந்த நான்கு தொகுப்புகளும் சேர்ந்து தற்போ துள்ள 44 தொழிலாளர் சட்டங்களை மாற்றியமைக்கின் றன. இந்தத் தொகுப்புகள், தொழிலாளர்களின் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை - ஊதியங்கள், தொழில் உறவுகள், சமூகப் பாதுகாப்பு மற்றும் பணியிடப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் ஆகியவற்றைக் கையாள்கின்றன.  சாராம்சத்தில், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தால் வழிநடத்தப்படும் கார்ப்ப ரேட்-மதவாத கூட்டணியின் நிகழ்ச்சி நிரலை மேலும் வெறித்தனத்துடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் தொழிலாளர் வர்க்கம் கடுமையாகப் போராடி வென்ற உரிமைகள் அனைத் தையும் முறையாகக் கைவிடும் நோக்கத்துடன் இத்தொகுப்புகள் அனைத்தும் கொண்டு வரப்பட்ட வைகளாகும். இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக ஜூலை 9 வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக மத்தியத் தொழிற்சங் கங்கள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய அளவில் செயல்படும் அரசு ஊழியர், வங்கி ஊழியர், காப்பீட்டு ஊழியர் முதலான சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து இந்த வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தன. எனினும் கூட இவர்கள் மட்டுமல்லாமல், இந்த வேலை நிறுத்தத்திற்கு அனைத்து வகை தொழி லாளர்களும் ஆதரவு அளித்தனர். கட்டுமானத் துறையில் உள்ள முறைசாரா தொழிலாளர்கள் முதல் நிதித் துறையில் உள்ள ஊழியர்கள், ‘ஜிக்’ தொழிலா ளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வரை - அனைவரும் ஒற்றுமையாகக் குரல் எழுப்பினர். இந்த வேலை நிறுத்தத்திற்கு விவசாயிகளின் விரிவான அமைப்பாக விளங்கும் சம்யுக்த கிசான் மோர்ச்சாவும் (ஐக்கிய விவசாயிகள் முன்னணி) ஆதரவு அளித்தது. இது, நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோ ரிக்கையை ஆதரிப்பதோடு ; விவசாயிகள் எதிர் கொண்டுவரும் விவசாய நெருக்கடியை சுட்டிக்காட்டி யதுடன் வேளாண் விளைபொருள்களுக்குக் குறைந்த பட்ச ஆதார விலை கோரிக்கையை சட்டமாக்க வேண்டும் என வலியுறுத்தியும், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாகக் குறைக்கப்பட்டு வரு வதைக் கண்டித்தும் இவ்வேலை நிறுத்தத்துடன் தங்க ளையும் இணைத்துக் கொண்டனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்

இவ்வாறு தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்திருப்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் குறிக்கி றது. இதுபோன்ற ஒரு விரிவான ஒற்றுமை தோன்றி யிருப்பது இதுவே முதல் முறையாகும். இது நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பரவலான மற்றும் ஆழமடைந்து வரும் வாழ்வாதார நெருக்கடியை பிரதிபலிக்கிறது. ஒரு விதத்தில், தொழிலாளர்கள், தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை வெறும் வாழ்வாதார நெருக்க டியாக மட்டும் பார்க்கவில்லை, அவை தாங்கள் உயிர்வாழ்வதற்கான போராட்டமாகவும் மாறியி ருப்பதை உணர்ந்தார்கள். தொழிலாளர் தொகுப்புச் சட்டம் என்ற பெயர்களில் இவை கார்ப்பரேட்டுக ளுக்கு சேவை செய்வதற்காகவே கொண்டுவரப்பட்டி ருக்கின்றன என்பதையும்; உண்மையில் இவை தொழிலாளர்களுக்கு விரோதமானவை என்பதையும் தொழிலாளர்கள் நன்கு உணர்ந்ததால்தான் முன்னி லும் பல மடங்கு ஒற்றுமையுடன் ஜூலை 9 வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்துள்ளார்கள்.

அம்பலப்பட்டது  மோடி அரசின் பாசாங்குத்தனம்

தொழிலாளர்களின் பெயரிலேயே தொழிலாளர்க ளுக்கு விரோதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கும் பாசாங்குத்தனத்தை தொழிலாளர்கள் நன்கு அறிந்துகொண்டுவிட்டார்கள் என்பது மேலும் மேலும் தெளிவாகிவிட்டது. வேலை நிலைமைகள் மிகவும் வெளிப்படையாகவும் கடுமையாகவும் மோச மடைந்துள்ளதால் அவற்றை இனி மறுக்க முடியாது.  அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் சமத்துவ மின்மையின் கூர்மையான அதிகரிப்பு, உழைக்கும் மக்களின் நிலைமை மோசமடைவதற்கு இரண்டு முக்கிய காரணிகளாக இருந்து அவர்களை போராட்டக் களத்திற்கு உந்தித்தள்ளியுள்ளன.

எல்லாம் கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கு ...

2025 ஜனவரி 31 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான பொரு ளாதார ஆய்வறிக்கை கூட இந்த எதார்த்த நிலை மையை ஒப்புக்கொண்டிருந்தது. நாட்டின் மொத்த மதிப்புக் கூடுதலில் (GVA-Gross Value Added) தொழிலாளர்களின் பங்கு மிக அற்பமான அளவில்தான் அதிகரித்திருக்கிறது என்பதை அது குறிப்பிட்டுள்ள அதே சமயத்தில், கார்ப்பரேட்டுகளின் லாபங்கள், குறிப்பாக பெரிய கார்ப்பரேட் நிறுவ னங்களின் மத்தியில் கார்ப்பரேட்டுகளின் லாபங்கள், வருமான சமத்துவமின்மை அதிகரித்திருப்பதை, அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அரசாங்கம் தொழிலாளர்கள் மற்றும் பிற உழைக்கும் பிரிவினரின் உரிமைகள் மீது கடுமை யான தாக்குதலைத் தொடங்கிய அதே சமயத்தில், அது கார்ப்பரேட்டுகளுக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தாரை வார்த்துள்ளது. இது கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான ஒருங்கிணைந்த பட்ஜெட் ஒதுக்கீட்டை விட அதிகமாகும். தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை (National Family Health Survey) இந்த மோசமான சமூக நிலைமைகளை அப்பட்டமாகப் பிரதிபலிக்கின்றது.  மேலும் சில பொருளாதார வல்லுநர்கள் கூறுவது போல், இந்தியாவில் சமத்துவமின்மை இன்று பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் காணப்பட்ட அளவை விட அதிகமாக  உள்ளது. இதற்கு நேர்மாறாக, கார்ப்பரேட் உயர டுக்கின் செல்வம் வியத்தகு முறையில் உயர்ந்துள்ளது. 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் பில்லிய னர்களின் எண்ணிக்கை 2014 இல் 100ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை இப்போது 200ஆக இரட்டிப்பாகி யுள்ளது. முதல் 100 பில்லியனர்களின் மொத்த செல்வம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை (1 லட்சம் கோடி டாலர்) தாண்டியுள்ளது. இந்த அருவருப்பான செல்வக் குவிப்பு ஒருபுறம் இருக்க; மறுபுறம், பெரும் பான்மையான உழைக்கும் மக்களின் உண்மை வருமானத்தில் கூர்மையான சரிவு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மூச்சின் வியர்வைத் துளியிலும் உணரப்பட்ட இந்த ஆழமான அநீதிக்கு எதிரான ஆவேசம் தான் ஜூலை 9ஆம் தேதி நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் வெளிப்பட்டது.

பாஜகவின்  ஈவிரக்கமற்ற கருத்து

தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் முக்கியமாக ‘தொழிலாளர் சந்தை நெகிழ்வுத்தன்மை’ (‘labour market flexibility’) என்ற மிகவும் பிரபலமான கருத்தை நிறுவனமயமாக்க உதவியது. இது பாஜக வின் 2009 தேர்தல் அறிக்கையில் முதன்முதலில் தோன்றிய ஒரு கருத்தாகும். உண்மையில், இது தொழிலாளர்களுக்கு தற்போது இருக்கும் குறைந்த பட்ச பாதுகாப்புகளைக் கூட அகற்றுவதன் மூலம் செயல்படுத்தப்பட்ட இரக்கமற்ற முறையில் ‘வேலை யில் அமர்த்து; துரத்து’ (‘hire and fire’) என்கிற ஆட்சி யாளர்களின் கருத்தாக்கத்தைத் தவிர வேறல்ல. ஒப்பந்தத் தொழிலாளர் முறை பரவலாகி இருப்ப தால், இப்போது நிரந்தரத் தொழிலாளர் முறை என்பது நாட்டில் உள்ள மொத்த தொழிலாளர் எண்ணிக்கை யில் 4 சதவீதம் மட்டுமேயாகும். மற்ற அனைவரும் ஒப் பந்தத் தொழிலாளர்கள், அவுட்சோர்சிங் (outsour cing) தொழிலாளர்கள் . இவர்கள் பல்வேறு வகையான சுரண்டல் சூழலுக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.  இந்த 4 சதவீதத் தொழிலாளர்களுக்கு இருந்து வரும் தொழிற்சங்க உரிமைகளையும்கூட பல வீனப்படுத்தும் விதத்தில்தான் ‘தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்’ கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

 நிதி மூலதனத்தின் சதி

இந்தத் தொழிலாளர் தொகுப்புகள், நிதி மூல தனத்தால் இயக்கப்படும் நவீன தாராளமயப் பொரு ளாதாரக் கொள்கையுடன் ஒத்துப்போகின்றன. அவற்றின் முக்கியமான அம்சம் என்பது தொழிற் சங்கங்களையும், அவற்றின் கூட்டுபேர உரிமைகளை யும் ஒழித்துக்கட்டுவது என்பதேயாகும். இந்த லட்சணத்தில் அரசாங்கம், இந்தியாவை உலகின் நான்காவது மிகவும் சமமான பொருளா தார (‘fourth most equal economy’) நாடு என்று பிரகடனம் செய்திருக்கிறது. இதைவிட கேலிக்கூத்து  வேறெதுவும் இருக்கமுடியாது. இது மிகவும் அபத்தமான கூற்றாகும். இது மிகவும் வினோதமா னது மற்றும் நேர்மையற்றது. ஜூலை 9ஆம் தேதி தொழிலாளர் வர்க்கம் வெளிப் படுத்தியுள்ள உறுதியான நடவடிக்கை, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளைத் திருப்திப் படுத்தும் விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு ஓர் எச்சரிக்கை மணியாகும். அலை அலையாக  தொடர்ந்து எழும்! அரசாங்கம் தொழிலாளர் வர்க்கத்தின் கோரிக்கை களை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது அவர்க ளைப் பொறுத்தது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இனி தொழிலாளர் வர்க்கம்  பின்வாங்கப் போவதில்லை. அவர்களின் போராட்ட நடவடிக்கைகள் முன்னிலும் பல மடங்கு விரிவான அளவிலும், பன் மடங்கு பலத்துடனும் ஒற்றுமையுடனும், அலை அலையாக வளரும், முன்னேறிக் கொண்டிருக்கும். ஜூலை 9, 2025  தமிழில் : ச.வீரமணி