states

ஆந்திராவில் சோகம் லாரி கவிழ்ந்து பெண்கள் உட்பட 9 பேர் பலி

ஆந்திராவில் சோகம் லாரி கவிழ்ந்து பெண்கள் உட்பட 9 பேர் பலி

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ஷெட்டிகுண்டா எஸ்.டி. காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 22 பேர் ஞாயிறன்று ராஜம்பேடு அருகே உள்ள ஈசுகுபள்ளி கிராமத்திற்கு மாம்பழங்கள் பறிக்கும் வேலைக்குச் சென்றனர். மாம்பழங்க ளை பறித்த பின்பு லாரியில் ஏற்றி, தொழி லாளர்களும் ஏறிக்கொண்டு கோடூர் மாம்பழ சந்தைக்கு சென்றனர். அவர்க ளுடன் சில கூலித்தொழிலாளர்களின் குழந்தைகளும் சென்றனர். நள்ளிரவில் ரெட்டிபல்லே ஏரிக்கரை வளைவில் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல மாம்பழ லோடு லாரி டிரைவர் முயன்றார்.  ஆனால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பெண்கள் உட்பட 9 பேர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்தனர்.