கடன் தொல்லையால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களின் சொத்துக்களை பறிமுதல் ஆகாமல் பாதுகாக்க முன்வந்துள்ள கேரள அரசு
வேகமெடுக்கும் ‘வறுமையற்ற கேரளம்’ திட்டம்
திருவனந்தபுரம் கடன் தொல்லையால் பாதிக் கப்பட்ட ஏழை குடும்பங்க ளின் சொத்துக்களை பறிமுதல் ஆகாமல் பாதுகாக்க கேரள அரசு முன்மாதிரி திட் டத்தை தொடங்கியுள்ளது. கடன்பட்ட காரணத்தால் சொத்துக்கள் பறிமுதல் ஆகும் அபாயத்தில் உள்ள மிகவும் ஏழைக் குடும்பங்களை பாதுகாக்க கேர ளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு உடனடி நடவடிக்கை மேற் கொண்டு வருகிறது. நவம்பர் 1 க்குள் மாநிலத்தை வறுமையிலி ருந்து முற்றிலும் விடுவிப்பதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, உள்ளூர் சுயாட்சித் துறை இந்த முயற்சியை முன்னெடுக்கிறது. 6 குடும்பங்கள் அதன்படி 12,326 மிகவும் ஏழைக் குடும்பங்கள் கடன் பிரச்சனையில் சிக்கியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றில் 300 குடும்பங்களுக்கு மாதிரி ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 102 குடும்பங்களுக்கு நிலு வையில் கடன்கள் உள்ளன. மிக முக்கியமாக 6 குடும்பங்கள் (5.9%) கடன் பிரச்சனையால் உடனடியாக சொத்து பறிமுதல் ஆபத்தை எதிர்கொண்டன. 102 குடும்பங்களில் 26 குடும் பங்கள் வீடு கட்டுதல்/பழுது பார்த்தல் செலவுகளுக்கும், 24 குடும்பங்கள் மருத்துவச் செலவுக ளுக்கும், 7 குடும்பங்கள் திருமணச் செலவுகளுக்கும், 4 குடும்பங்கள் கல்விச் செலவுகளுக்கும் கடன் வாங்கியுள்ளன. அதே போல கூட்டுறவு வங்கிகளில் 33 குடும் பங்களும், குடும்பஸ்ரீ போன்ற நுண்நிதி நிறுவனங்களில் 26 குடும் பங்களும், வணிக வங்கிகளில் 13 குடும்பங்களும் கடன் வாங்கி யுள்ளன. மேலும் 12 குடும்பங்கள் தனியார் கடன் கொடுப்பவர்கள் மூலமாக கடன் வாங்கியுள்ளன. 123 ஆண்கள், 177 பெண்க ளின் பெயர்கள் மீது கடன் நிலுவை உள்ளது. திருநங்கை சமூ கத்திலிருந்து யாரும் கடன் பெற வில்லை. கணக்கெடுக்கப்பட்ட 214 வீடுகளில் பெரும்பாலானவை கிராம பஞ்சாயத்து பகுதிகளில் அமைந்துள்ளன. அதில் பட்டியல் சாதி (SC) சமூகத்தைச் சேர்ந்த 66 பேரும், பட்டியல் பழங்குடி (ST) சமூகத்தைச் சேர்ந்த 20 பேரும் அடங்குவர். இது சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின் தங்கிய குழுக்களின் பிரதி நிதித்துவத்தை உறுதி செய்கிறது என கணக்கெடுப்பு மூலம் தகவல் வெளியாகியுள்ளது. வறுமையற்ற கேரளம் இத்தகைய சூழலில், கடனால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு கேரள அரசு நிதி உதவிகள் மற்றும் கடன் தள்ளுபடி திட்டங்களை வழங்க உள்ளது. இதன்மூலம் கடன் வாங்கிய ஏழைக் குடும் பங்களின் சொத்துக்களை பறிமுதல் ஆகாமல் பாதுகாக்க முடியும். குறிப்பாக இந்த திட்டம் மூலம் “வறுமையற்ற கேரளம்” என்ற இலக்கை அடையும் என்ற எதிர்பார்ப்பு பிரகாசமாக உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளன. கடனை அடைக்கும் முயற்சி, எந்தவொரு குடும்பமும் தீவிர வறுமையில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட கேரள அரசின் நுண் திட்டமிடல் உத்தியின் ஒரு முக்கிய அங்கமாகும். மாவட்ட திட்டமிடல் அதிகாரிகளால் உருவாக்கப்பட்டு, நிர்வகிக்கப்படும் கட்டமைக் கப்பட்ட அறிக்கையைப் பயன் படுத்தி சரிபார்ப்பு செயல்முறை அடிமட்டத்தில் மேற்கொள் ளப்படுகிறது என செய்திகள் வெளி யாகியுள்ளன.