“பீகாரில் தேர்தல் ஆணையத்தின் படிவங்கள் ஜிலேபி விற்கப் பயன்படுகின்றன”
பீகார் மாநிலத்தில் உள்ள வாக்கா ளர் பட்டியலில் நேபாளம், வங்கதேசம், மியான்மர் போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமா னோர் சட்டவிரோதமாக இடம்பெற்றுள்ள தாகவும், தங்களுக்கு ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, வாக்காளர்களின் குடியுரி மையை உறுதி செய்வதற்காக “சிறப்புத் தீவிர திருத்தப் பணி” என்ற பெயரில் வாக்காளர் பெயர், முகவரி சரிபார்ப்புப் பணியை கடந்த ஜூன் 25 அன்று தேர்தல் ஆணையம் தொடங்கியது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தி லும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பீகார் எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் இருப்பதாக கூறும் தேர்தல் ஆணை யத்தின் இந்தக் குற்றச்சாட்டை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். “இந்தியா” கூட்டணித் தலைவர்களுடன் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மேலும் கூறுகையில்,”தேர்தல் ஆணை யம் தங்களுக்கு “ஆதாரம்” கிடைத்த தாகக் கூறுகிறது. நாங்கள் அதை “சூத்ரா”வாகக் (ஆதாரமாக) கருத வில்லை, “மூத்ரா”வாகவே (சிறுநீர்) கருதுகிறோம். இந்தக் குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. மேலும், இந்த வாக்காளர் சரி பார்ப்புப் பணி என்பது கண் துடைப்பு நாடகம் ஆகும். இதில் வெளிப்படைத் தன்மை இல்லை. பீகாரில் 80% வாக்கா ளர் படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் கூறு கிறது. ஆனால், எனது படிவமே என்னிடம் இருந்து பெறப்படவில்லை. பல இடங்களில் படிவங்கள் தூக்கி எறியப்படுகின்றன. சில இடங்களில் ஜிலேபி விற்கப் பயன்படுகின்றன. ஆன்லைன் சர்வர் பிரச்சனைகள், ஓடிபி குளறுபடிகள் எனத் தொழில் நுட்பப் புகார்களும் கண்டுகொள்ளப்பட வில்லை. இந்த ஒட்டுமொத்த நடவடிக்கை யும் பாஜகவின் அறிவுறுத்தலின் பேரில் நடக்கிறது. தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக செயல்படு கிறது. கடந்த தேர்தலில் எங்களது கூட்டணிக்கு 52 தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் வெறும் 5,000 வாக்குகளாக இருந்தது. இந்த சரிபார்ப்புப் பணி மூலம் ஒரு சதவீதம் வாக்காளர்களை நீக்கினால்கூட, பீகார் முழுவதும் சுமார் 7.9 லட்சம் பேர் வாக்களிக்கும் உரி மையை இழப்பார்கள். இது ஒரு தொகு திக்குச் சராசரியாக 3,200 வாக்குகளைக் குறைக்கும் இதன் மூலம் ஏழை மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வாக்குகளைப் பறிக்கச் சதி நடக்கிறது” என குற்றம் சாட்டினார்.