states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்

அமெரிக்காவின் யுசெட்( USAID) நிறுவனம் இந்திய தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக பாஜக ஐடி செல் பிரிவினர் எழுதித் தள்ளினர். ஆனால் 2023-24ஆம் ஆண்டில் ரூ.6,500 கோடி மதிப்புள்ள ஏழு திட்டங்களுக்கு யுசெட் நிதி அளித்திருப்பதாக தற்போது நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.தேவையற்ற பிரச்சனையை கிளப்பி கதை கட்டி விட்ட கூட்டம் இப்போது என்ன பதில் சொல்லும்?


சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

மகாராஷ்டிரா - கர்நாடகா இடையே மொழி மூலம் மோதல் தீவிரமடைந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க இரு மாநில முதலமைச்சர்களை பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித் ஷா அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். ஆனால் ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது.

ஆம் ஆத்மி மூத்த தலைவர் குல்தீப் குமார்

தில்லி முதலமைச்சர் அலுவலகத்தில் பிரதமர், ஜனாதிபதியின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் புகைப்படங்களை வைப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் ஏன் அம்பேத்கர் மற்றும் பகத்சிங்கின் புகைப்படங்களை நீக்கினார்கள்? இதற்கான காரணத்தை பாஜக விளக்க வேண்டும்.

மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண்

மோடியின் நண்பர் டொனால்டு டிரம்ப், வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பக் கூடாது என்றும் வாக்குச்சீட்டுகள்தான் நம்பத்தகுந்தவை என்றும் கூறியிருக்கிறார். என்ன செய்யப்போகிறார் மோடி?