ஒடிசா அரசு அவசர ஆலோசனை
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் ஒடிசா மாநிலத்தில் மேகவெடிப்புக்கு நிகராக கனமழை புரட்டியெடுத்து வருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கணிக்க முடியாத அளவிற்கு கனமழை பெய்து வருவதால் ஒடிசா அரசு அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளது. திங்களன்று புவனேஸ்வரில் உள்ள ராஜீவ் பவனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், உயரதிகாரிகள் பங்கேற்றனர்.