முட்டல் நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை அனுமதி
ஆத்தூர் அருகே உள்ள ஆனை வாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், சுற்று லாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் ஊராட்சிக்குட்பட்ட முட்டல் கிராமத்தில் ஆனைவாரி நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. கல்வராயன் மலைத்தொடர் அடிவாரப் பகுதியில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு, சேலம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல் வேறு பகுதியிலிருந்து ஏராளமான சுற்று லாப் பயணிகள் வருவது வழக்கம். வனத்துறை பராமரிப்பில் முட்டல் ஏரி பகுதியில் சுற்றுலாப் பூங்காவும், குழந் தைகள் விளையாட மான், யானை உள்ளிட்ட கண் கவர் வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட் களாக வெயில் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக நீர்வரத்து குறைந்து காணப் பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வரத்தும் வெகுவாக குறைந்த அளவே இருந்தது. தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக கல்வராயன் மலைப்பகுதி யில் பெய்த கனமழை காரணமாக முட் டல் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்த தால் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனு மதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், நீர்வரத்து சீரானதையடுத்து வியாழ னன்று நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத் துறையினர் அனுமதி வழங்கியதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், நாரைக்கிணறு, ஊத்துப்பள்ளக்காடு கிரா மத்தில் 70 ஆண்டுகாலம் வனத்தில் விவசாயம் செய்து வந்த 25 பழங்குடியின மக்களுக்கு தனிநபர் உரிமைகளாக உரிமைச் சான்றுகளை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதி வேந்தன் வியாழனன்று வழங்கினார். கே.ஆர்.என்.ராஜேஸ் குமார் எம்.பி., ஆட்சியர் ச.உமா ஆகியோர் உடனிருந்தனர்.