tamilnadu

img

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்

ஊரக வளர்ச்சித்துறை அலு வலர்கள் வியாழனன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இத னால், தருமபுரி திட்ட இயக்குநர் அலுவலகம், 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் 251 ஊராட்சி அலுவலகங்கள் என மாவட்டத்தின் அனைத்து ஊரக வளர்ச்சி அலுவலகங்களும் வெறிச் சோடி காணப்பட்டன. ஊராட்சி செயலாளர், ஒட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட அனைத்து காலிப்பணி யிடங்களையும் உடனடியாக நிரப்ப  வேண்டும். பழைய ஓய்வூதியத் திட் டத்தை மீண்டும் அமல்படுத்த வேண் டும். ஊரக வளர்ச்சித்துறை ஊழி யர்கள் மீது திணிக்கப்படும் பிற  துறை பணிகளை முற்றாக கைவிட வேண்டும். தருமபுரி மாவட்டம், கடத்தூர், ஏரியூர், பென்னாகரம் மற் றும் மொரப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு விடுபட்ட மண் டல துணை வட்டார வளர்ச்சி அலுவ லர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுமார் 354 அலுவலர்கள் இந்த அடையாள வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால், பல ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் பூட்டப்பட்டிருந்தன. சில அலுவல கங்கள் திறக்கப்பட்டிருந்தாலும், அலுவலர்கள் யாரும் இல்லாத தால் வெறிச்சோடி காணப்பட்டன.