ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 8- ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து, ஜூலை 9 அன்று வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தநல்லூர் ஒன்றிய குழுவின் சார்பில், குழுமணி கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் அஜித்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.லெனின், ஒன்றியச் செயலாளர் கருணாநிதி ஆகியோர் உரையாற்றினர். இதில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் முருகன், ரவிச்சந்திரன், நடராஜன், கோபால் மற்றும் ரங்கநாதன், கோகுல், சுப்பிரமணியன், நாராயணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.