tamilnadu

img

அகில இந்திய பொதுவேலை நிறுத்தம் குறித்து பெரம்பலூரில் பிரச்சாரம்

அகில இந்திய பொதுவேலை நிறுத்தம் குறித்து  பெரம்பலூரில்  பிரச்சாரம்

பெரம்பலூர், ஜூலை 8-  ஜூலை 9 நடைபெறக்கூடிய அகில இந்திய வேலை நிறுத்தத்தையொட்டி, தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பாக, செவ்வாய்க்கிழமை பெரம்பலூர் பிரிவு அலுவலகங்கள், மேற்பார்வை பொறியாளர்கள், செயற்பொறியாளர் அலுவலகம், பண்டகச் சாலை, துணை மின் நிலையம் ஆகிய அலுவலங்களில் கூட்டுக்  நடவடிக்கை குழு சார்பாக பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சார இயக்கத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு(சிஐடியு ) மண்டல செயலாளர் அகஸ்டின், ஹெச்.எம்.எஸ் தொழிற்சங்கத்தின் மாவட்ட நிர்வாகி சின்னசாமி, யூடியூசி மாவட்ட நிர்வாகி கனி, தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக வேணுகோபால் மற்றும் சுகுமாரன், நீலமேகம், செந்தில், திணேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.