tamilnadu

img

தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்குக! இரா. முத்தரசன் வலியுறுத்தல்

தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்குக! இரா. முத்தரசன் வலியுறுத்தல் 

கடலூரில் வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலி

பெரம்பலூர், ஜூலை 8-  கடலூர் மாவட்டத்தில் ரயில்வே கேட் மூடப்படாததால் பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்  முத்தரசன் வலியுறுத்தினார். பெரம்பலூரில் செவ்வாயன்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட 9 ஆவது மாநாட்டில் கலந்து கொண்ட கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பீகார் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என்ற ரீதியில் பல்வேறு நிபந்தனைகளின் கீழ், பாஜகவுக்கு எதிரான  வாக்களர்கள் நீக்கப்பட்டு வருவது தேர்தல் ஆணையம் நடுநிலையற்று செயல்படுவதையே காட்டுகிறது. இன்று பீகாரில் நடைபெறும் இதேநிலை நாளை தமிழ்நாட்டிலும் நடைபெறலாம் என்று எச்சரித்தார்.  காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வ பெருந்ததகையை காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அவரது சொந்த தொகுதியான ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் நடைபெற்ற கோயில் குடமுழுக்கு விழாவின் போது இந்து அறநிலைய துறை அதிகாரிகள் அவமரியாதை செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.