கன்னியாகுமரி மாவட்டத்தில் தீக்கதிருக்கு 390 சந்தா ரூ. 8.5 லட்சம் உ. வாசுகியிடம் அளிப்பு
குமரி மாவட்டம் தக்கலையில் ஜூலை 30 அன்று நடைபெற்ற சிபிஎம் பேரவையில் தீக்கதிர் நாளிதழுக்கான ஆண்டு சந்தா 355, ஆறு மாத சந்தா 35 என மொத்தம் 390 சந்தாக்களுக்கான தொகை 8 லட்சத்து 58 ஆயிரத்து 500 ரூபாயை, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் மாவட்டச் செயலாளர் ஆர். செல்லசுவாமி,
மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். ரெஜீஸ்குமார் ஆகியோர் வழங்கினர். மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர். லீமாறோஸ், அ. ராதிகா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், எம். அண்ணாத்துரை, என். உஷா பாசி, என்.எஸ். கண்ணன், ஏ. நீலாம்பரம், கே. தங்கமோகன், எஸ்.சி. ஸ்டாலின், ஆர். ரவி. எம். அந்தோணி, தக்கலை ஒன்றியச் செயலாளர் சுஜா ஜாஸ்மின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் 250 சந்தாக்கள் அளிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட 250 தீக்கதிர் சந்தாக்களுக்கு உரிய தொகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்திடம் வழங்கப்பட்டது. கியூபா ஆதரவு நிதியாகவும் ரூ. 40 ஆயிரம் பெ. சண்முகத்திடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப. செல்வன், மாநிலக்குழு உறுப்பினர் எம். சிவக்குமார், தீக்கதிர் மாவட்டப் பொறுப்பாளர் எம். பிரகலநாதன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், ந. சேகரன், எஸ். ராமதாஸ், இரா. பாரி, கே. வாசுகி, ஏ. லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிவகங்கையில் தீக்கதிருக்கு 168 சந்தாக்கள்
சிவகங்கையில் தீக்கதிருக்கு 168 சந்தாக்களை மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கத்திடம் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.மோகன் வழங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜூணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணியம்மா, வி.கருப்புசாமி, முத்துராமலிங்க பூபதி, ஆறுமுகம், சேதுராமன் அய்யம்பாண்டி, சுரேஷ் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.