வன்முறையை தூண்டும் பதிவு இந்து முன்னணி நிர்வாகி கைது
ஈரோடு, மார்ச் 13- மத வன்முறையை தூண்டும் வகையில் முகநூலில் பதிவுகளை வெளியிட்டதாக, இந்து முன்னணி முன் னாள் மாவட்ட நிர்வாகியை போலீசார் கைது செய்த னர். ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அடுத்த அய்யம் பாளையத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினரும் இந்து முன்னணியின் முன்னாள் மாவட்ட துணைத் தலைவரு மான ஸ்ரீதர் என்பவர் சமூக முகநூலில் இஸ்லாமியர்கள் குறித்து மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வீடியோ பதிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீதரின் கருத்து சாதி கலவரம், மத கலவரம் ஏற்படுத் தும் வகையில் உள்ளதாகவும், அவர் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி திராவிடர் விடுதலை கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் ரத்தினசாமி புகார் அளித்திருத் தார். வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்திய காவல் துறையினர் அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
உருக்காலையில் வெடிகுண்டு மிரட்டல்? சேலம்,
மார்ச் 13- சேலம் உருக்காலை மற்றும் அரசு பொறியல் கல் லூரியில், வெடிகுண்டு வைத்துள்ளதாக இ - மெயில் மூலம் வந்த தகவலின்பேரில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள அரசு பொறியியல் கல்லூரி மற்றும் உருக்காலை ஆகிய இரண்டு இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக பன் டாரி மைல்சாமி என்ற தனிநபர் இ - மெயிலில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் சேலம் மாநகர வெடி குண்டு செயலிழப்பு பிரிவு ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள், கல்லூரியின் முதல்வர் அறை, ஆய்வுக்கூடம் மற்றும் வகுப்பறையில் உள்ளிட்ட 12 பிளாக்குகளில் தீவிர சோதனையில் ஈடு பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள் ளது.
சிறுத்தை தாக்கியதில் பெண் பலி
உதகை, மார்ச் 13 - மைனலை அரக்காடு கிராமத்தில் தேயிலைத் தோட் டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சிறுத்தை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம், தும்மனாட்டி ஊராட்சிக்குட்பட்ட ஜே.பாலகொலா பொம்மன் நகர் பகுதியை சேர்ந்த கோபால் - அஞ்சலை தம்பதியினரின் அஞ்சலை (50) மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இவர் புதனன்று மதியம் வீட்டை விட்டு வெளியே சென்று வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடி வந்தனர். இந் நிலையில், வியாழனன்று காலை மைனலை அருகே உள்ள அரக்காடு தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறிப்பதற்காக வந்த வடமாநில தொழிலாளர்கள் அப் பகுதியில் பெண் ஒருவர் வனவிலங்கு தாக்கி உயிரிழந்து கிடப்பதைக் கண்டு வனத்துறை மற்றும் காவல்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசா ரணை மேற்கொண்டனர். விசாரணையில் அஞ்ச லையை தாக்கியது சிறுத்தை என்பது உறுதி செய்யப் பட்டது. தற்போது அப்பகுதியில் சுற்றித் திரியும் சிறுத் தையை பிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட்டு, கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப் படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை
கோவை, மார்ச் 13- கோவையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த சொக்கலிங்கம் (54) என்பவர் வ.உ.சி மைதானத்தில் புதனன்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சொக்கலிங் கம், கோவைப்புதூரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் முதல் கோவை பயங்கரவாத தடுப்பு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், புதனன்று நள்ளிரவு 2 மணியளவில் பந்தய சாலை போலீசார் ரோந்து சென்றபோது, வ.உ.சி மைதானத்தில் உள்ள புங்கை மரத்தில் சொக்கலிங்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனடி யாக, போலீசார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமுதாய வளைகாப்பு
நாமக்கல், மார்ச் 13- பள்ளிபாளையத்தில் நடைபெற்ற சமுதாய வளை காப்பு நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி திரு மண மண்டபத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில், கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளை காப்பு நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. கர்ப்ப காலத்தில் பெண்கள் உட்கொள்ள வேண்டிய உணவு கள், உட்கொள்ள கூடாத உணவுகள், செய்ய வேண்டிய கர்ப்ப கால பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தான விழிப்புணர்வு கண்காட்சி, பல்வேறு சிறுதானிய உணவு கள், காய்கறிகள், உணவு வகைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், பள்ளிபாளை யம் நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், திமுக ஒன்றி யச் செயலாளர்கள் செல்வம், நாச்சிமுத்து, இளங்கோ, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.