articles

img

விடுதலைக்கான பாதை மார்க்சியமே! கிளைகள் தோறும் உயரட்டும் செங்கொடி! - என்.குணசேகரன்

விடுதலைக்கான பாதை மார்க்சியமே! கிளைகள் தோறும் உயரட்டும் செங்கொடி!  - என்.குணசேகரன் 

மதுரையில் நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாட்டின் மகத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்ல பல்லாயிரக்கணக்கான கட்சியின் கிளைகள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. மார்ச் 14 கார்ல் மார்க்ஸ்  நினைவு தினம். மார்க்சி யத் தத்துவ வழிகாட்டுதலில் செயல்படும்  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி அன்றைய தினம் அனைத்து கிளைகளிலும் கொடியேற்றிக் கொண்டாடுகிறது. காரல் மார்க்ஸ் 1883 ஆண்டு மார்ச் 14 அன்று மறைந்த போது, “மகத்தான சிந்தனையாளர் தன்னுடைய சிந்தனையை நிறுத்திக் கொண்டார்” என்றும்” அவரது எழுத்துக்கள், பணிகள் அனைத்தும் பல சகாப்தங் கள் நிலைத்து நிற்கும் என்றும் ஏங்கெல்ஸ் குறிப்பிட்டார். ஆனால்,மார்க்ஸ் வாழும்போது அவரது எழுத்துக்களை இருட்டடிப்பு செய்த மேற்கத்திய உலகம் அவருடைய மறைவுச் செய்தியையும் அலட்சி யப்படுத்தியது.  “லண்டன் டைம்ஸ்” இதழின் இரங்கல் செய்தி யில் மார்க்சை “சோசலிசத்தின் தந்தை” என்று குறிப் பிட்டு, மார்க்சின் தத்துவங்கள் “வன்முறை தத்து வம்” என தூற்றியது. ஜெர்மானிய பத்திரிக்கை ஒன்று மார்க்சின் தத்துவம் சமூக ஒழுங்கை சிதைக்கும் என்று எழுதியது. இதுபோன்ற அவதூறுகள், எதிர்ப்புகள் அத்தனை யும் எதிர்கொண்டு சுமார் ஒன்றரை நூற்றாண்டுக்கும் மேலாக, மார்க்சியம் மேலும் மேலும் வலுப்பெற்று வருகிற தத்துவமாக திகழ்கிறது. தமிழகத்திலும் அறிவார்ந்த மக்கள் மத்தியிலும், உழைக்கும் மக்களிடமும் மார்க்சியத் தத்துவம் வேரூன்றி வந்துள்ளது. தமிழக சமூக அரசியல் பொருளாதார சூழலில்  உழைக்கும் மக்கள் நலன் சார்ந்த பார்வையுடன், மார்க்சியத்தின் வழிகாட்டு தலில் நின்று மார்க்சிஸ்ட் கட்சி செயல்பட்டு வருகிறது.

தனிச்சிறப்புடன் மார்க்சிஸ்ட் கட்சி

தமிழக அரசியலை பாரபட்சமின்றி கவனித்து வருபவர்கள் ஓர் உண்மையை ஏற்றுக்கொள்வார்கள்: பல அரசியல் இயக்கங்களின் பல்வேறு அரசியல் கொள்கை செயல்பாடுகளிலிருந்து வேறுபட்டு, தனித் தன்மை கொண்ட  அரசியல் கட்சியாக  மார்க்சிஸ்ட்  கட்சி இயங்கி வருகிறது. உயர்ந்த அரசியல் தரத்துடன்,  மேலான மாற்று அரசியலை முன்னெடுத்து வரும் கட்சி மார்க்சிஸ்ட் கட்சி. இதற்கு மூன்று காரணங்கள்: 1. மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல், உழைக்கும் வர்க்கங்களின் நலன் சார்ந்த அரசியல். 2. வர்க்கப் பார்வையுடன் தனிச் சிறப்பு கொண்ட அரசியல் பார்வையை வகுத்து கட்சி செயல்பட்டு வரு கிறது. தனித்தன்மை எனும்போது தனித்த மரமாக கட்சி இருப்பதில்லை. வர்க்க அரசியல் குறிக் கோளை நிறைவேற்ற இதர பொருத்தமான அரசி யல் இயக்கங்களோடு கூட்டாக செயல்படுவதையும் கட்சி தவிர்ப்பதில்லை. 3. கட்சியின் உயர்ந்த தரமான அரசியல் பார்வைக்கு  காரணம் ,மார்க்சிய லெனினிய தத்துவக் கண் ணோட்டம்.  கட்சியின் இரண்டு தீர்மானங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள்; ஒன்று, விழுப்புரம் மாநில மாநாட்டு அரசியல் தீர்மானம். மற்றொன்று, இடது ஜனநாயக செயல்திட்டம்.  விழுப்புரம் மாநில மாநாட்டு அரசியல் தீர்மானம் தமிழகத்திற்கான மாற்றை முன்வைக்கிறது. அத்து டன் ஆற்றிட வேண்டிய கடமைகளை முன் வைத்துள்ளது: “தமிழகத்தின் தொழிலாளர்கள், விவசாயப் பிரிவினர், நடுத்தர மக்கள், இளைஞர்கள், பெண்கள், மாற்று பாலினத்தவர் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு இடதுசாரிக் கொள்கை வழியிலான மாற்றம் ஏற்பட வேண்டும்.  “சமூகத்தின் மேல் தட்டில் இருக்கும் - பெருமளவு சொத்துக்களைக் குவித்துள்ள சிறு கூட்டத்தினரின் நலன்களை பாதுகாக்கிற கொள்கைகளை அகற்றி உழைக்கும் மக்களுக்கான சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகள் கொண்ட இடதுசாரி மாற்று தமிழகத்தில் வலுப்பெற வேண்டும். இதுவே தமிழக மக்களுக்கான உண்மையான விடியலாக அமைந்தி டும்.” “இந்த வரலாற்று மாற்றத்தை சாதிக்க ஜனநாயக சக்திகள், மக்கள் இயக்கங்கள், அனைத்துப்பகுதி உழைக்கும் வர்க்கங்கள், மக்கள் நலன் மீது அக்கறை கொண்டவர்கள், மனிதநேய சமூக ஆர்வ லர்கள், அறிவுத்துறையினர் என அனைவரும் முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.”

தமிழகத்தின் உண்மையான மலர்ச்சிக்கான திட்டம்

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் உள்ள  இடதுசாரி, ஜனநாயக சக்திகள் ஒன்று திரள மாற்றுக் கொள்கைகளை முன்வைத்துள்ளது. சில அம்சங்கள் வருமாறு: K விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காக, வலுக் கட்டாயமாக கையகப்படுத்துவதிலிருந்து விவசாய நிலங்களைப் பாதுகாக்க வேண்டும். கோயில் நிலங்கள், ஆதீனநிலங்கள், அறக்கட்டளைகள் என நிலக்குவியல் நீடிப்பது, ஏராளமான ரியல் எஸ்டேட் கம்பெனிகள், ஏகபோக மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் நிலங்களை கையகப்படுத்தும் நிலையில், நில உச்சவரம்புச் சட்டத்தில் உள்ள குறைபாடுகள், ஓட்டைகளைக் களைந்து   உபரி நிலத்தை  நிலமற்றவர்களுக்கு விநியோகம் செய் aக்கூடிய முழுமையான நிலச்சீர்திருத்தம். K விளைபொருட்களுக்கு நியாய விலை, விவசா யத்தை லாபகரமானதாக மாற்றுவது, கூட்டுறவுக் கடன் வசதி, விவசாயக் கடன். K மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை நாட்கள் அதிகரிப்பு, ஊதியம் அதிகரிப்பு, விவசாயத் தொழிலாளர்களின் ஊதியம், சமூகப் பாதுகாப்புக்கான மத்திய சட்டம், கிராமப்புற தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு. K குடிநீர் மற்றும் பாசன வசதியை மேம்படுத்தல், மராமத்து பணிகளைச் செய்து ஏரிகள், குளங்கள், கால்வாய்களைப் பாதுகாத்தல், நிலத்தடி நீர் பாது காப்பிற்கு நடவடிக்கைகள், சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர். K வேலை வாய்ப்புக்கான திட்டங்களை உருவாக்கும் வகையில் அரசின் பொது முதலீட்டை அதிகரித் தல், தொழில் துவங்குவதற்கான கடன், வெளி மாநில தொழிலாளர்களின் வேலை நிலைமைகளை மேம்படுத்தி அவர்களுக்கான பாதுகாப்புச் சட்டங்க ளை பின்பற்றுதல். K அரசுப் பணிகளில் வேலை வாய்ப்புகளை அதி கரித்தல், காலிர் பணியிடங்களை வெளிமுகமை வழியாக நிரப்புவதைக் கைவிட்டு முறையாக அப்பணிகளில் வேலை நியமனங்கள், நிரப்பப் படாத  பின்னடைவு காலி இடங்களை முறையாக இட ஒதுக்கீட்டை அமலாக்கி நிரப்புதல், வேலையில்லா காலத்திற்கு நிவாரணம், தனியார் துறையில் இடஒதுக்கீடு. K நகர்ப்புற உழைக்கும் மக்கள், ஏழைகள், குடிசை வாழ் மக்கள், நடுத்தர வர்க்கங்களின் அடிப்ப டைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நகர்ப்புற கொள்கைகள், திட்டங்கள், நகர்ப்புற ஏழை களுக்கு வீட்டுமனை, வாழ்விட உரிமை, நகர்ப்புற வேலை உறுதி சட்டம். Kதொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட குறைந்த பட்ச ஊதியம், ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம், ஒப்பந்த முறை மற்றும் தற்காலிக தொழிலாளர்களை நிரந்தர மாக்குதல், பழைய பென்சன் முறை அமலாக்கம். K சிறு-குறு தொழில்களைப் பாதுகாப்பதற்கு மத்திய,  மாநில அரசு நடவடிக்கை. சிறு,குறு தொழில், சுய தொழில் தொடங்குவதற்கு பட்டியல் இன- பழங்குடி மக்களுக்கு கூடுதல் வாய்ப்புகள். K இன்சூரன்ஸ்,வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறு வனங்களை பாதுகாத்தல்  - மேற்கண்ட பட்டியலை ஆராய்ந்தால் அவை முழுக்க இதுகாறும் சுரண்டப்பட்டு வரும் பாட்டாளி வர்க்கங்களின் நலன் காக்கும் முழக்கங்கள் என்பதை அறிய முடியும். வர்க்கக் கண்ணோட்டம் இதரக் கட்சிகள், இயக்கங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு மார்க்சிஸ்ட்களுக்கு உண்டு. அதுதான் வர்க்கக் கண்ணோட்டம். இது காரல் மார்க்சின்  அடிப் படை போதனை.  வர்க்கமும், வர்க்கப் பிரிவினைகளும், வர்க்கப் போராட்டமும் தான் முதலாளித்துவ சமூகத்தின் அடிப்படை. மானுடத்தின் தேவைகளுக்கான உற்பத்தியில் ஒவ்வொரு வர்க்கமும் குறிப்பிட்ட பங்கினை ஆற்று கிறது. உழைப்பைச் செலுத்துபர்களாக குறிப்பிட்ட வர்க்கங்களும், அந்த உழைப்பைச் சுரண்டி மூலதன உடைமை கொண்டவர்களாக மேலாதிக்க வர்க்கங்களும் உள்ளனர். இது பற்றி கம்யூனிஸ்டுகள் தவிர மற்றவர்க ளுக்கு புரிதல் இல்லை; அல்லது புரிதல் இருந்தும்  வர்க்கங்களின் பாத்திரத்தை கண்டுகொள்ளாதவர்க ளாக அவர்கள் இருக்கின்றனர். இதன் வழியாக அவர்கள் முதலாளித்துவ வர்க்கங்களின் நலன்களை பாதுகாப்பவர்களாக உள்ளனர். இதனால்தான் தமிழகத்தில் நீண்ட காலம்  இருக்கும் இயக்கங்களும், புதிதாக துவங்கிய கட்சி களும் வெறும் வாய்ப்பந்தலையும், வெற்று முழக்கங்க ளையும் முன்வைக்கின்றனர். உண்மையில் பலர் பேசுகிற தமிழ்த்தேசிய வாதங்களும், தமிழக வர்க்கக் கட்டமைப்பை புரிந்து கொள்ள முடியாதவாறு மக்களை திசை திருப்புகிறது. வர்க்கக் கட்ட மைப்பை புரிந்து செயல்படவில்லை என்றால் இன்னல் மிகுந்த வாழ்க்கையிலிருந்து மக்கள் விடுதலை அடைவது சாத்தியமில்லை.  

மனிதம் காக்க சோசலிசம்

டொனால்டு டிரம்ப் கூட்டத்தினால் ‘வந்தேறிகள்’ என்று இழிவாக அழைக்கப்படுபவர்கள்தான் அமெரிக்காவின் செல்வ வளத்தை உயர்த்துவதற்கு தங்களது உயிர்களை உழைப்பையும் செலுத்திய எளிய உழைப்பாளி மக்கள். ஆனால் இன்று அவர்க ளை அமெரிக்க அரசு வேட்டையாடுகிறது. ஆவணம் இல்லாமல் அமெரிக்காவிற்குச் சென்ற இந்தியர்கள் கைகள் - கால்கள் விலங்கிடப்பட்டு டிரம்ப் அரசி னால் திருப்பி அனுப்பப்பட்ட கொடூரம் மனித மன சாட்சி கொண்டோர் அனைவரையும் உலுக்கியது. மனிதர்களை இழிவுபடுத்தி அடிமைப்படுத்தும் கொடூரம் எப்போது முடிவுக்கு வரும் என்று மனித மனசாட்சி கேள்வி எழுப்பியது . வரலாற்று அனுபவம் எடுத்துரைப்பது என்ன வென்றால் முதலாளித்துவம் இருக்கின்ற வரை இப்படிப்பட்ட கொடூரங்களுக்கு முடிவுகட்ட இயலாது என்பதுதான். தொழிலாளி தனது உழைப்பை எங்கு  வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம் என்ற நிலையை சோசலிசமே ஏற்படுத்தும். சுதந்திரமாக உழைக்கிற உரிமையை உறுதி செய்யும் சமூகம் சோச லிசமே!  மனித சமத்துவம், மனிதம் மேம்பாடு போன்ற உயரிய மதிப்பீடுகள் கொண்ட மகத்தான சமூகம் சோசலிச சமூகம்! அன்றாடம் நடக்கும் அநீதிகள் சோசலிசத்தின் தேவையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வரு கின்றன. சோசலிச சமூகம் அமைப்பது என்பது காரல் மார்க்ஸ் முன்வைத்த கனவுத் திட்டம் அல்ல ; அது மானுட சமூக இயக்கத்தை அறிவியல் விதிகள் அடிப்படையில் ஆராய்ந்து வந்தடைந்த முடிவு. ஒவ்வொரு சமூகமும் -  சுரண்டலை ஆதாரமாகக் கொண்ட வர்க்கங்களும் சுரண்டப்படும் வர்க்கங்க ளும் - என்கிற வர்க்க கட்டமைப்பு கொண்டதாகவே இருந்து வந்துள்ளது. வரலாறு முழுவதும் நடக்கும் வர்க்க முரண்பாடு கள் புரட்சியை முன்னெடுக்கும். மனித உற்பத்தியின் மீதான சுரண்டும் வர்க்கங்களின் அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் புரட்சி முடிவுக்குக் கொண்டு வரும். நாட்டின் உற்பத்தியிலும் வளங்களிலும் பாட்டாளி வர்க்கம் முழுமையான அதிகாரம் பெறும்.  பாட்டாளி வர்க்க அரசு சோசலிசத்தைக் கட்டும்  பணியை மேற்கொள்ளும். வரலாற்று விதிகளின் அடிப்படையில் சோசலிச சமூகம்தான் மானுடத்திற் கான உறுதியான எதிர்காலம். இந்த இலட்சிய சமூகத்தை நாடு தழுவிய அளவில் அமைத்திடும் பாதையில் தமிழகமும் பயணப்பட வேண்டும். தமிழக அரசியலில் உண்மையான ‘மக்கள் மாற்று’ அமைய வேண்டும். இதற்கு மூன்று தளங்களில் நாம் கடமையாற்ற வேண்டும்.  1. நவீன தாராளமய கொள்கைகள் அமலாக்கத்திற்கு வலுமிக்க எதிர்ப்பு.  2. “உழைக்கும் வர்க்கங்களின் அரசியலை தமிழ கத்தில் முதன்மைப்படுத்தல். 3.இந்துத்துவாவின் வகுப்புவாத அரசியலை யும், சாதிய, இனவாத அடையாள அரசியலையும் வீழ்த்த அயராத செயல்பாடு. மதுரை மாநாடும், மாநாட்டின் முத்தாய்ப்பாக இலட்சக்கணக்கானோர் திரளுகிற ஏப்ரல் 6 மக்கள் சங்கமமும், எதிர்கால தமிழக வரைபடத்தை செதுக்கிடும். அதை நோக்கிய எழுச்சியின் அடையாளமாக, மாமேதை காரல்மார்க்ஸ் நினைவு நாளில் - தமிழ கம் முழுவதும் கிளைகள் தோறும் செங்கொடி உயரட்டும்.