districts

img

பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்

நாமக்கல், ஜன.17- திருச்செங்கோடு பகுதியில் வாலிபர் சங்கம் சார்பில், மக் கள் ஒற்றுமையை வலியுறுத்தி 4 நாட்கள் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் வெள்ளியன்று நிறைவுபெற்றது. நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் முற்போக்கு அமைப்பு கள் சார்பில், மக்கள் ஒற்றுமை சமத்துவ பொங்கல் விளை யாட்டுப் போட்டிகள் வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக, இந்தாண்டு நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம், நல்லாக்கவுண்டம்பாளையம், பகத்சிங் நகர் கிளையில் விளையாட்டுப் போட்டிகள் நடை பெற்றது. ஆண்டிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.ஆதிநாராயணன் போட்டிகளை துவக்கி வைத்தார். வாலிபர் சங்க கொடியினை சங்கத்தின் ஒன்றியச் செயலா ளர் எம்.சூர்யபிரகாஷ் ஏற்றி வைத்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேஷ் பாண்டியன் வாழ்த்திப் பேசி னார். இதையடுத்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கள் எம்.சிங்காரவேலு, சுமதி பழனிசாமி, வாலிபர் சங்க  முன்னாள் மாவட்டச் செயலாளர் ராஜசேகரன் மற்றும் தமு எகச மாவட்டத் துணைத்தலைவர் க.கோபி, சிபிஎம் கிளைச் செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசுகளை வழங்கினர். திருச்செங்கோடு பகுதியில் 6 கிளைகளில் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி, 4 நாட் கள் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி, வெள்ளியன்று நிறைவுபெற்றது. இதில் சிபிஎம் நகரச் செயலாளர் சீனி வாசன், சிபிஐ நிர்வாகி ஜெயராமன், நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு, முன்னாள் தலைவர் பொன்.சரஸ்வதி, வாலிபர் சங்க நிர்வாகிகள் பூவரசன், எம்.முருகேசன், ஆர். வீரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் மாவட்டம், வாழப்பாடி தாலுகாவில், தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் (மலைவாழ்  மக்கள் சங்கத்தின் உறுப்பு சங்கம்) சார்பில் ஒற்றுமை பொங் கல் விழா நடைபெற்றது. இதில் பேராசிரியர் ம.கருணா கரன், மக்கள் ஒற்றுமை மேடை மாவட்டக்குழு உறுப்பினர் குழந்தைவேலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் அன்பழகன், தாலுகா செயலாளர் பழனிமுத்து, தமுஎகச மாவட்டக்குழு உறுப்பினர் அக்பர்ராஜா, வழக்கறி ஞர் ராபர்ட், குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாவட்டப் பொருளாளர் தினகரன், முன்னாள் செயலாளர் சிலம்பு முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனி டையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரம் பார்வதி பவுண்டேசன் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.