districts

img

பேரூர் படித்துறையில் கொட்டப்படும் கழிவுகளால் பாழடைந்து வரும் நொய்யல் ஆறு

கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம், சிறுவாணி  கிழக்குச்சரிவு, வெள்ளிங்கிரி மலையில் உருவாகும் நொய்யல் ஆறு ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், மாதம் பட்டி உள்ளிட்ட கிராம விவசாயிகளுக்கு முக்கிய நிலத்தடி நீர், விவசாயத்திற்கான  நீராதாரமாக உள்ளது.  கோவை மாவட்டத்தில் மாநகர் பகுதி யில் உள்ள உக்கடம் பெரிய குளம், குறிச்சிக்குளம், செங்குளம், செல்லசிந்தா மணிக்குளம் உள்ளிட்ட 8 குளங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சூலூர் குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களுக்கும் முக் கிய நீராதாராமாக இருந்து வருகிறது. நொய்யல் ஆறானது, சூலூர், திருப்பூர், ஓரத்துப்பாளையம், என சுமார் 180 கிலோ மீட்டர் பயணித்து கரூர் நொய்யல் கிராமத் தில் காவிரி ஆற்றில் கலக்கிறது. பல்வேறு  வரலாறுகள் உள்ள நொய்யல் ஆற்றுப் பாதை, ஆலாந்துறை பகுதியில் மண்  திருட்டு, பேரூர் படித்துறையில் கொட்டப் படும் பூஜை உள்ளிட்ட கழிவுகள், செல்வ புரம் பகுதியில் உள்ள நகை உற்பத்தி ஆலைக் கழிவு நீர், பட்டினம் பகுதியில் கலக்கும் சாயக்கழிவுகள் என பல இடர் களை தாண்டி அடை மழை காலத்தில் தன்னை காப்பாற்றிச் செல்கிறது. இதனால் நொய்யல் ஆற்றை பாதுகாக்க பல்வேறு அமைப்பினர் போராடி வருகின்றனர். இந் நிலையில் பேரூர் படித்துறையில் கால மான மூதாதையர்களுக்கு ஆடி அமா வாசை உள்ளிட்ட நாட்களில் தர்ப்பணம்  செய்ய வரும் பொதுமக்கள் தாங்கள் பயன் படுத்திய மாலை, பூக்கள் மற்றும் ஆடை களை ஆற்றில் வீசி வருகின்றனர். இதனால்  நொய்யல் நீர் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தது.  அலட்சியம் இதனையடுத்து, பேரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக நொய்யல் ஆற்றில் பூஜை கழிவுகள் கொட்ட தடை விதிக்கப் பட்டு கண்காணிக்கபட்டது. மேலும் அண்மையில் ஒலி பெருக்கி மூலம் அறி விக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டதுள்ளது. இருப்பினும் கடந்த சில தினங்களாக பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில் கொட்டப்படும் பூஜை கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளால் மீண்டும் மோசமான நிலைக்கு நொய்யல் ஆறு மாறியுள்ளது. மீண்டும் மழை வந்தாலும் அடைப்பின் காரணமாக முழுமையாக நொய்யல் ஆறு தன் பாதை யில் பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள் ளது., அதே போல ஆற்றில் செல்லும் இக் கழிவுகளால் குளத்தின் நுழைவு பகுதி யில் அடைப்பு ஏற்படும் அபாயமும் ஏற்பட் டுள்ளது. தினமும் நொய்யலில் கொட்டப் படும் கழிவுகளை பேரூராட்சி நிர்வாகம் தூய்மைபடுத்தி வந்த நிலையில் கடந்த சில  நாட்களாக கண்டுகொள்ளாததே கழிவுகள் தேங்க காரணம் என அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நொய்யல் ஆற்று நீரை பாது காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நொய்யில் ஆற்று நீரில் நீராடுவது, தீர்த் தம் போல தெளித்துக்கொள்வது, அந்த  தண்ணீரில் பொங்கல் வைப்பது போன் றவை காலம் காலமாக செய்து வருகிறோம்.  பூஜை கழிவுகள் மட்டுமின்றி பல்வேறு கழிவு களும் ஆற்று நீரில் கொட்டப்படுகிறது. சிலர் துணி துவைத்து வருகின்றனர். இதனால் நொய்யல் ஆற்றின் அருகே சென்றால் கூட நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.  உடனடியாக ஆற்றில் உள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என்றனர். இது குறித்து பேசிய பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை கூறுகையில், பேரூர் படித்துறை பக்தர்கள் மற்றும் கோவில் கழிவுகளை கொட்டாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளது. அதனை மீறியும் சில பக்தர்கள் கழிவுகளை கொட்டிச் செல்கின்றனர். அத னையும் உடனடியாக ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். பொங்கல் தொடர் விடுமுறை தினம் என்பதால் கூடுதலாக கழிவுகள் சேர்ந்துள்ளது. அதனையும் அகற்றும் பணி கள் நடைபெற்று வருகிறது, என்றார். - கவி