- கார்த்திக் மதிவாணன் - கோவை, ஜன.17- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள கோவை வனக்கோட்டம் 694 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. கோவை வனக்கோட்டத்தில் மதுக்கரை, போளுவாம் பட்டி, கோவை, பெரியநாய்க்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டு மாடு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. குறிப்பாக யானை கள் அதிகளவில் இருப்பதோடு, வலசை செல்லும் யானைகளும் வந்து செல்கின்றன. இதனிடையே உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் வனப்பகுதியை ஒட்டி யுள்ள கிராமங்களுக்குள் நுழைவது அடிக்கடி நடந்து வருகிறது. அதிலும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் கிராமப்பகுதிக்குள் நுழை வதும், அதனால் பயிர் சேதங்கள் ஏற்படுவ தும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தவிர்க்க வனத்துறை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதுடன், ஊருக்குள் நுழையும் யானை களை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக கோவை வனக்கோட்டத்தில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அவ்வாறு வரும் யானைகள் விவசாய விளை பொருட்களை மட்டுமின்றி, வீடுகளை சேதப் படுத்தி அரிசி, கால்நடைத் தீவனங்கள் உள்ளிட்ட வற்றை சாப்பிட்டு செல்வது அதிகரித்து வரு கிறது. யானைகளால் பயிர் சேதங்கள் ஏற்படுவதை தடுக்க விவசாயிகள் மின்வேலி கள் அமைத்தல், இரவு நேரங்களில் காவல் காத்தல், பட்டாசுகளை வெடித்து விரட்டுதல் உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். தின மும் இரவு நேரங்களில் வனத்துறையினரும், விவசாயிகளும் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டும் பணிகளை செய்வதால், வன எல்லை யோர கிராமங்களில் தினம் தினம் தீபாவாளி கொண்டாடுவது போன்ற நிலை இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “யானைகள் பட்டா நிலங்களுக்குள் நுழை வதால் உயிர் இழப்புகளும், பயிர் சேதங்க ளும் ஏற்படுகின்றன. யானைகளின் உணவு பழக்கங்கள் மாறி, ரேசன் அரிசி, கால்நடை தீவனங்கள் உள்ளிட்டவைகளை சாப்பிடுவது அதிகரித்துள்ளது. யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் எடுக்கும் நடவடிக்கைகள் பயன் தருவதில்லை. காட்டு யானைகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற் படுவதை தவிர்க்க, வன உயிர் பாதுகாப்பு சட் டத்தில் திருத்தம் கொண்டு வருவதே தீர்வாக அமையும்’’ என்றார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவின் தலைவர் முகமது சலீம் கூறுகையில், “பொதுவாக ஜன வரி மாதத்தில் கோவையில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். வலசை பாதைகளில் ஏற்படும் இடையூறு காரண மாக, யானைகள் கிராமப்பகுதிக்குள் வழி தவறி நுழைகின்றன. அதேபோல காடுகளுக் குள் உணவு பற்றாக்குறை மற்றும் யானை கள் விரும்பி சாப்பிடும் கரும்பு, வாழை போன்ற பயிர்களை தேடியும் அவை கிராமங்களுக்குள் வருகின்றன. இதனால் பாதிப்புகளும் அதிக ரிக்கின்றன. இதன் பின்னணியில் சூழலியல் மாற்றங்களும் முக்கிய காரணமாக உள்ளன’’ என்றார். யானைகள் கிராமங்களுக்குள் நுழை வதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறியதாவது, “யானைகள் கிரா மங்களுக்குள் நுழைவதை தடுக்க அகழி கள் மற்றும் சோலார் மின்வேலிகள் அமைக்கப் பட்டுள்ளன. வனப்பகுதிக்குள் இருக்கும் தண் ணீர் தொட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக் கப்பட்டுள்ளன. 15 ஏ.ஐ. கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வனச்சரகத்திலும் 2,3 குழுக்கள் வீதம் சுமார் 20 குழுக்கள் இரவு நேரங்களில் யானைகளை கண்காணித் தல் மற்றும் வனப்பகுதிக்கு விரட்டுதல் உள் ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். இதில் 80 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொண்டாமுத்தூரில் முதல மைச்சர் அறிவித்தபடி, ரூ.7 கோடி செலவில் 10 கி.மீ. தொலைவிற்கு யானை புகாத நவீன பாதுகாப்பு வேலிகள் அமைக்கப் பட்டு வருகின்றன’’ என்றார். இது குறித்து சூழ லியலாளர் கள் கூறு கையில், “வன விலங்குகள் அண்மைக்காலமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழை வது அன்றாட ஒன்றாக மாறியுள்ளது. வனத் துறையினர் வன விலங்குகள் ஊருக்குள் வரு வதை தடுப்பது எப்படி என யோசிக்கிறார் களேயொழிய, இவைகள் ஏன் வருகிறது என் பது குறித்த அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்வதில்லை. உணவுக்காக வருகிறது, தண்ணீர் தேடி வருகிறது என பொத்தாம் பொது வாக சொல்லாமல் இதற்கான உரிய ஆய்வுகள் நடத்த வேண்டும். இதுவே தீர்வு” என்றனர்.