திருப்பூர், ஜன.17- தெரு நாய்களால் உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு கோரி தொடர் போராட்டம் நடத்த விவசாயிகள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவெ டுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் வெறி நாய் களால் கால்நடைகளை இழந்த விவ சாயிகள் ஒருங்கிணைப்பு கலந்தாய் வுக் கூட்டம் வெள்ளகோவிலில் வியாழ னன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வரு மாறு: வெறி நாய்கள் கடித்து இறந்த கால்நடைகளுக்கு 50 தினங்களுக்குள் இழப்பீடு பெற்றுத் தரப்படும் என திருப் பூர் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின் பேரில் காங்கேயம் வட்டாட்சியர் கடிதம் மூலம் உறுதிமொழி கொடுத்தும், இது வரை எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. விவசாயிகள் பல கட்ட போராட்டங் களைக் கடந்து வந்தும், தெரு நாய்க ளுக்கு கால்நடைகளை பலி கொடுத்து, வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங் கள் வீதிக்கு வருவது தொடர் நிகழ்வாக உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட கால் நடை இழப்புத் தொடர்பான பட்டியலு டன் செய்தித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆகியோரை நேரில் சந்தித்து மீண்டும் முறையிடுவது, ஜன வரி 26 ஆம் தேதி கிராம சபைக் கூட் டத்தில், பாதிக்கப்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கருப்பு சட்டை அணிந்து, கருப்பு கொடி ஏந்தி, கால் நடைகளுடன் கிராம சபைக் கூட்டத் தில் திரளாக கலந்து கொள்வது. கடந்த முறை, 17 ஊராட்சிகளில் தெரு நாய் களை அகற்றவும், இழப்பீடு கோரியும், நிறைவேற்றப்பட்ட கோரிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும் என கேட்பது. ஏற்கனவே இறந்த கால்நடை களின் உடற்கூராய்வு நகல் மற்றும் 45 நாட்களில் இழப்பீடு கொடுக்கப்படும் என்ற கடிதத்தின் நகல் இரண்டையும் விவசாயிகள் எடுத்துச் செல்ல வேண் டும். இன்னும் இரண்டு தாலுகாக்களி லும் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி அடுத்த கட்டமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு நூற் றுக்கணக்கானேர் பங்கேற்று தொடர் உண்ணாவிரதம் இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. தெரு நாய்களால் ஆடுகள் தாக்கப்பட்டாலோ, இறந் தாலோ அவைகளை எடுத்துக் கொண்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் திரளாகக் குடியேறும் போராட் டம் முன்னெடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் மாவட்ட அள வில் பாதிக்கப்பட்ட கிராம ஊராட்சி களில் பொறுப்பாளர்களை நியமித்து, அவர்கள் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு மிகப்பெரிய உள் கட்ட மைப்பை ஏற்படுத்தவும் தீர்மானிக்கப் பட்டது. மேலும், இத்தகைய கோரச் சம் பவங்கள் நடைபெற்றால் மாவட்ட அள வில் நடைபெறும் அமைதிப் பேச்சு வார்த்தையில் பிராணிகள் வதை தடுப் புச் சங்க நிர்வாகிகளையும் சேர்த்துக் கொள்ளவும் அரசு நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப் பட்டது. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நீதிமன்ற முன்னெடுப்புகளைத் தொடர வும் முடிவு செய்யப்பட்டது.