மானை விழுங்கிய மலைப் பாம்பு
கோவை, ஜன.17- பெரியநாயக்கன்பாளையம் அருகே விவசாயி ஒருவரின் தோட்டத்தில் மலைப் பாம்பு ஒன்று மானை விழுங்கி அவதிப் பட்டு வந்தது. மான் உயிரிழந்த நிலையில், மலைப் பாம்பை உயிருடன் மீட்டனர். கோவை, பெரியநாயக்கன்பாளையம் அடுத்து உள்ள கூடலூர், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராம சாமி என்பவர் தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று வயிறு பெருத்த நிலையில் நெளிந்தபடி கிடந்து உள்ளது. இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத் திற்கு வந்த 7 பேர் கொண்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் உயிருடன் இருந்த அந்த மலைப் பாம்பை மீட்டனர். அது விழுங்கி இருந்த மானை லாவகமாக வெளியேற்றினர். பின்னர் உயிருடன் இருந்த அந்த மலைப் பாம்பை வனத் துறை யினரிடம் ஒப்படைத்தனர். மானை விழுங்கிய மலைப்பாம்பை கண்டு அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
புதிதாக ஒளிரும் பட்டை ஒட்ட நிர்பந்தம்! லாரி உரிமையாளர் சம்மேளனம் எதிர்ப்பு
சேலம், ஜன.17- லாரியில் பாதிக்கப்படைந்த பகுதியில், புதிதாக ஒளிரும் பட்டை ஒட்ட அதிகாரிகள் நிர்பந்தம் செய்வதற்கு லாரி உரிமை யாளர் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கனரக வாகனங்களில் ஒளிரும் பட்டைகள் ஒட்டுவது சம் பந்தமாக மாநில போக்குவரத்து துறையிடமிருந்து பல்வேறு குறிப்பாணைகள், சுற்றறிக்கைகள் அவ்வப்போது வெளி யிடப்பட்டு வருகிறது. விபத்தில் இருந்து பாதுகாக்க வாக னங்களில் ஒளிரும் பட்டைகளை ஒட்டுவது வழக்கம். ஒளிரும் பட்டைகள் ஒட்டியதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வரு கிறது. தற்போது வாகனத்தை எப்சி செய்யும் போது புதி தாக ஒளிரும் பட்டையில் ஒட்ட வேண்டும் என்ற உத்தரவு இல்லாத நிலையில், எங்கு ஒளிரும் பட்டையில் பாதிப்பு உள்ளதோ அந்த இடத்தில் மட்டும் ஒட்டிக் கொள்ளலாம் என போக்குவரத்து ஆணையாளர் உத்தரவு இருந்தும், சில வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நிர்பந்தப்படுத்தி வரு கின்றனர். இதுதொடர்பாக, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் சேலம் துணை வட்டாரப் போக்கு வரத்து ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்மேளன மாநிலத் தலைவர் தன்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், லாரியில் ஒளிரும் பட்டை ஒட்டியதற்கு சான்றிதழுக்கு மட்டும் 1500 ரூபாய்க்கு மேல் செலவாகிறது. ஒளிரும் பட்டகளை கட்டாயமாக புதிதாக ஒட்ட வேண்டும் என்ற சிலரின் நடைமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் போக்குவரத்து துறையில் 11 துணை வட்டார போக்குவரத்து ஆணையாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது 6 பேர் மட்டுமே உள்ளனர். 60க்கும் மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், 150க்கும் மேற்பட்ட முதல் நிலை இரண்டாம் நிலை போக்குவரத்து அதி காரிகள் காலிப் பணியிடங்கள் உள்ளது. ஒளிரும் பட்டைகள் சம்பந்தமாக அரசு போக்குவரத்து ஆணையர் வெளியிட்ட அறிக்கையில் உள்ளது போல் பாதிப்படைந்த இடத்தில் மட்டும் ஒளிரும் பட்டை ஒட்ட வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும், என்றார்.
தொடர் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தொடர் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் உதகை, ஜன.17- காணும் பொங்கல் பண்டிகையை ஒட்டி உதகை கூட லூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பைன் பாரஸ்ட் சுற்றுலாத் தலத்தில், சுற்றுலாப் பயணிகள் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து, புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் கோலாகல மாக கொண்டாடப்பட்டது. வியாழனன்று காணும் பொங் கலை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூடினர். குறிப்பாக அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிக ளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதேபோல் உத கையிலிருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநி லங்களுக்கு செல்லக்கூடிய கூடலூர் தேசிய நெடுஞ்சாலை யில் அமைந்துள்ள பைன் பாரஸ்ட் சூழல் சுற்றுலாத் தலம், வானுயர்ந்த மரங்களை, இயற்கை காட்சிகள் மற்றும் அதன் அருகே அமைந்துள்ள காமராஜர் அணை உள்ளிட்டவை களை கண்டு ரசித்ததோடு மட்டுமல்லாமல் தங்களது சுற்றுலா ஞாபகங்களை நினைவு கூறும் வகையில் செல்ஃபி மற்றும் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.
57 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்
57 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் சேலம், ஜன.17- சேலம் சரகத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 57 ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை யைக் கொண்டாட ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். பயணிகளின் வசதிக்கேற்ப அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜன.10,11,12 ஆம் தேதிகளில் சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கோவை, திருச்சி, நெல்லை போன்ற முக்கிய நகரங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், இந்தப் பேருந்துகளில் பொங்கல் விடுமுறையைப் பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? போக்குவரத்து விதிகள் மீறப்படுகிறதா? என்பது குறித்து சேலம் சரகத் துக்குட்பட்ட சேலம், தருமபுரி மாவட்டங்களில் போக்குவ ரத்துத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட னர். கடந்த ஜன.10 ஆம் தேதி இரவு முதல் ஜன.13 ஆம் தேதி வரை மேட்டுப்பட்டி, தொப்பூர், சுங்கச்சாவடிகளில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழி யாக சேலத்தில் இருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளில் சோதனை செய்த னர். அவ்வாறு நடத்தப்பட்ட சோதனையில் ஓட்டுநர் சீட் பெல்ட் அணியாமல் பேருந்தை ஓட்டியது, பேருந்தில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றியது, ஓட்டுநர் உரிமம், பர்மிட் இன்றி பேருந்துகள் இயக்கப்பட்டது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக 57 ஆம்னி பேருந்துகளின் உரிமை யாளர்களுக்கு ரூ.ஒரு லட்சத்து 28 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
பொங்கல் சிறப்பு பேருந்து: கோவையில் இருந்து 1.78 லட்சம் பேர் பயணம்
கோவை, ஜன.17- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை மண்டலத் தில் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 1.78 லட்சம் பயணி கள் பயணித்து உள்ளனர். கடந்த ஜன.12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 1,520 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் கோவை மண்ட லத்தில் இருந்து மட்டும் 850 பேருந்துகள் இயக்கப்பட்டன. சிங்காநல்லூர், சூலூர், காந்திபுரம் மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. பொங்கல் பண்டிகையை முன் னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்து களில் பயணிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. 1.78 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர், என்றனர்.