தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 151 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தீயணைப்பு முகமை தெரிவித்துள்ளது.
ஜேஜு ஏர் பேசஞ்சர் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737-800 ரக விமானம், தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் 6 ஏர்லைன்ன் குழுவுடன் தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது ஓடுபாதையில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் சுற்றுச்சுவரில் மோதி வெடித்தது. இந்த விபத்தில் இதுவரை 151 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2 பேர் உயிர் தப்பியுள்ளதாகவும் தென் கொரியா தீயணைப்பு முகமை தெரிவித்துள்ளது.
மீட்பு மணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணியில் 32 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
லேண்டிங் கியர் கோளாறு காரணமாக விபத்து நடந்திருக்க வாய்ப்புள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.