உதகை, டிச.31- பந்தலூர் அரசு பொது மருத்துவமனையில் அடிப் படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாநிலைப் போராட்டத் தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா மருத்துவமனை யாக தரம் உயர்த்தப்பட்ட பின்பும், அடிப்படை வசதி கள் இல்லாமல் செயல்படுகிறது. எனவே பந்தலூர் அரசு பொது மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பந்தலூர் ஏரியா கமிட்டியின் சார்பில் ஞாயி றன்று உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்திற்கு, கட்சியின் பந்தலூர் ஏரியா செயலா ளர் ரமேஷ் தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுதர்சன் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கி வைத்தார். கட்சியின் மூத்த தோழரும், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவருமான என்.வாசு, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஏ.குஞ்சு முகமது ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இதில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மணிகண் டன், ராசி.ரவிக்குமார், விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், நெலாக் கோட்டை ஏரியா செயலாளர்கள் ஜோஸ், யோக சசி ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். இதில், கட்சியின் ஏரியா கமிட்டி உறுப்பினர்கள், கிளைச் செய லாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடி வில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் யோகண்ணன் நிறைவுரையாற்றி, பழரசம் கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார்.