india

img

போக்குவரத்து நெரிசலில் மோசமான நகரங்கள் பட்டியல் வெளியீடு!

ஆசியாவிலேயே மிகவும் மோசமான நெரிசல் உள்ள நகரங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 4 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
டாம் டாம் டிராபிக் இண்டெக்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் ஆசியாவிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது இதில் பெங்களூரு முதலிடத்திலும்  புனே, தில்லி, மும்பை ஆகியவை அடுத்த மூன்று இடங்களில் உள்ளது.
சுமார் 10 கி.மீ. தூரத்தைக் கடக்க எடுக்கும் நேரம் கணக்கிடப்பட்டதில் பெங்களூருவில் 28 நிமிடம் 20 வினாடிகள் ஆகிறது. புனேவில் 27 நிமிடம் 3 வினாடிகளும், தில்லியில் 19 நிமிடம் 42 வினாடிகளும், மும்பையில் 27 நிமிடம் 18 வினாடிகளும் ஆகிறது.