india

img

இந்தியாவில் பள்ளி மாணவர் சேர்க்கையில் சரிவு!

புதுதில்லி,ஜனவரி.02- இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் 1.55 கோடி வரை குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2018-19 ஆண்டில் 26.03 கோடி மாணவர்கள் சேர்ந்த நிலையில், 2023-24 ஆண்டில் இது 24.80 கோடியாக குறைந்துள்ளது. பீகாரில் 35.65 லட்சம், உத்தரப் பிரதேசத்தில் 28.26 லட்சம், மகாராஷ்டிராவில் 18.55 லட்சம் மாணவர்கள் குறைந்துள்ளனர்.
2023-24 ஆண்டில் தமிழ்நாட்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் 0 மற்றும் 9-10 வகுப்புகளில் இடைநிற்றல் விகிதம் 7.68 ஆக உள்ளது என ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் ஆண்டு ஆய்வு அறிக்கையில் தகவல்.