திருப்பூர், ஜன.4 - திருப்பூரில் ஜனவரி 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் நடை பெறும் பொங்கல் திருவிழா மற்றும் ஜனவரி 23 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை நடைபெறும் 21 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா ஆகிய இரு பண்பாட்டு நிகழ்வுக ளிலும் பங்கேற்க வருமாறு அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து நொய்யல் பண்பாட்டு அமைப்பு நடத்தும் சமத்துவ பொங்கல் திருவிழா மற்றும் தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகத் துடன், திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் 21 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா ஆகிய இரு நிகழ்வு களில் பங்கேற்பதற்கு, மாநில செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாநில மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் ஆகியோரை சனியன்று மாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்த நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் நிர்வாகிகள் அழைப்பிதழ்களைக் கொடுத்து, இரு நிகழ்வுகளி லும் பங்கேற்று சிறப்பிக்கும்படி கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்வில் மு.ஜீவானந்தம், ஆர். ஈஸ்வரன், மோகன் கார்த்திக், பி.ஆர்.நடராஜன், பி.ஆர்.கணேசன் மற்றும் மு. திருப்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.