அவிநாசி, ஜன.6- அவிநாசி அருகே சேவூர் காவல் துறை சார்பில் திங்க ளன்று பள்ளி மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சேவூர் காவல் துறையினர் சார்பில், சேவூர் அரசு மேல்நி லைப் பள்ளி மற்றும் கானூர்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தடுப்பு, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். இதில், 18 வயது பூர்த்தியடையாமல் வாகனங்கள் ஓட்டக் கூடாது. மது அருந்தி வாகனம் ஓட்டுதல், கைபேசியில் பேசிக் கொண்டு வாகனம் ஒட்டுதல் போன்றவற்றால் விபத்து ஏற்படு வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், தலைக்க வசம், சீட் பெல்ட் உள்ளிட்டவைகள் அணிந்து வாகனம் ஓட்டு தல் ஆகியவை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.