குழித்துறை, ஜன. 7- கேரள மாநிலம் பூந்துறை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அரியவகை திமிங்கலத்தை அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் நீண்ட நேரம் போராடி கடலுக்குள் திருப்பி அனுப்பிய வீடியோ சமூக வலைதளஙகளில் வைரலாகி பரவி வருகிறது. கேரள மாநிலம் பூந்துறை கடற்கரை பகுதியில் நேற்று மதிய வேளையில் அரியவகை திமிங்கிலம் ஒன்று கரை ஒதுங்கி திரும்பி செல்ல முடியாமல் உயிருக்கு போராடியபடி கிடந்துள்ளது இதனை கண்ட அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் அந்த திமிங்கலத்தை கடலுக்குள் திருப்பி அனுப்பும் முயற்சியில் இறங்கி பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஒருவழியாக அதனை கடலுக்குள் தள்ளி விட்டனர் இதனையடுத்து அந்த திமிங்கிலம் கடலுக்குள் நீந்தி ஆழ்கடல் பகுதிக்கு சென்றது. உயிருக்கு போராடிய படி கரை ஒதுங்கி கிடந்த திமிங்கிலத்தை மீனவர்கள் கடலுக்குள் உயிரை கொடுத்து திருப்பி அனுப்ப முயன்றதை அந்த பகுதியை சேர்ந்த ஒருசிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.