tamilnadu

img

ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க விட மாட்டோம்!

சென்னை, ஜன. 8 - தமிழ்நாட்டில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் உறுதிபடத் தெரிவித்துள்ளார். வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய பாஜக அரசு அனுமதி அளித் துள்ளது. இதன்மூலம் மதுரை அரிட்டாபட்டி பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களும், விவ சாயமும் அழிக்கப்படும், பல்லுயிர்ப்  பாதுகாப்பு தலமாக அறிவிக்கப் பட்ட பகுதிகளும், வரலாற்றுச் சின்னங்களும், சுற்றுச்சூழலும் நாச மாக்கப்படும் என்பதால், டங்ஸ்டன் திட்டத்தை அடியோடு ரத்துசெய்ய வேண்டும் என வலியுறுத்தி மேலூர் பகுதி மக்கள் தொடர் போராட்டங் களை முன்னெடுத்து வருகின்றனர்.  இதனொரு பகுதியாக, செவ்வா யன்றும் மேலூர் பகுதி முழுவதும் கடையடைப்பும், மதுரை ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பல்லா யிரக்கணக்கான மக்கள் சுமார் 20 கி.மீ. ஊர்வலம் நடத்தினர். அவர்களில் 5 ஆயிரத்திற்கும் அதிக மானோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த விவகாரம் சட்டப்பேரவை யில் புதன்கிழமை (ஜன.8) எதி ரொலித்தது. அப்போது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம். சின்னதுரை பேசினார். “டங்ஸ்டன் சுரங்கம் அமைப்ப தற்கு, மதுரை மாவட்டம் மேலூர்  அருகே உள்ள அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட பல கிரா மங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்து நாளேட்டில் சிறிய செய்தி வந்தது. இதையடுத்து, சட்டப்பேரவையில் முதலமைச்சரால் கொண்டுவரப் பட்ட அரசினர் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களவையில் சு. வெங்க டேசன் தனித் தீர்மானம் கொண்டு வந்து கடுமையான எதிர்ப்பையும் ஆட்சேபணையும் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு  வந்து நிறைவேற்றிய அரசினர் தனித் தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பா ளர் பிரகாஷ் காரத் பாராட்டு தெரி வித்திருந்ததும் இங்கு குறிப்பிடத் தக்கது.

இத்தனை எதிர்ப்புகளுக்கு பிறகும் ஒன்றிய பாஜக அரசு, திட்டத்தை ரத்து செய்வதற்குப் பதி லாக, மறு ஆய்வுக்குகொண்டு வரு வதாக மட்டும் அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல. வேதங்களை போற்றுவதாக கூறிக்கொள்ளும் ஒன்றிய ஆட்சியாளர்கள் வேதாந்த த்தை (வேதாந்தா குழுமத்தை) வர வேற்பது மிகப்பெரிய ஆபத்தாகும். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட் டால் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இந்த திட்டத்தை உடனடி யாக தடுத்து நிறுத்த முதலமைச்சர் மேற்கொள்ளும் அனைத்து நட வடிக்கைகளோடும் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி இணைந்து செயல் படும்” என்று எம்.சின்னத்துரை தெரிவித்தார்.

பிரச்சனைக்கு மூலகாரணம் அதிமுக எம்.பி. தான்

இதைத் தொடர்ந்து பேசிய அதி முக உறுப்பினர் ராஜன்செல்லப்பா, இந்த திட்டத்தை கொண்டுவந் தது திமுக என்று திடீரென குற்றம் சாட்டினார்.  அப்போது குறுக்கிட்டு பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “தாம் முதல்வராக இருக்கும்வரையில் டங்ஸ்டன் சுரங்கத்தை அமைக்க விட மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெஞ்சுரத்துடன் கூறி உள்ளார். அப்படி அறிவித்ததுடன், தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கும் அனுப்பியிருக்கிறார் நமது முதல்வர். இந்தப் பிரச்சனையின் ரிஷி மூலம், நதி மூலம் என்ன என்று திரும்பி  பார்த்தால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எம்.பி. தான் உள்ளார்.  சுரங்க அனுமதி விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் விவகாரம் மாநிலங்களவை யில் வந்தபோது அதை ஆதரித்தது அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தான். அவர் ஆதரித்தது தான் டங்ஸ்டன் சுரங்க விவகாரத்துக்கு மூல முதல் காரணம்” என்றார்

பாஜகவின் மசோதாவை ஆதரித்தவர் தம்பிதுரை!

இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டனர். அப்போது முதல்வர் குறுக்கிட்டு, இந்த விவகாரம் மக்களவை மற்றும் மாநி லங்களவையில் எதிரொலித்தது. அப்போது, தீர்மானத்தை எதிர்த்தது எங்கள் கூட்டணி கட்சி எம்.பி.க்கள். ஆனால், மாநிலங்களவையில் உங்கள் உறுப்பினர் தம்பிதுரை என்ன  பேசினார் என்பதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அவர் ஆதரித்ததே இல்லை என்று சொல்கிறீர்களா?  தம்பிதுரை எதையும் பேசவில்லை என்று கூறு கிறீர்களா? ஆதாரம் இருந்தால் கொடுங்கள். ஒரு முடிவு எடுக்கலாம்.  உங்கள் உறுப்பினர் தம்பிதுரை மாநிலங்களவையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசி யிருக்கிறார். அதுதான் உண்மை. இல்லை என்று மறுக்கிறீர்களா? என்றும் கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்தார். மாநில அரசின் உரிமை பறிப்பு அதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “அரிய  வகை கனிம வகைகள் என்று மாநில  அரசின் உரிமையை மீறி, ஒன்றிய அரசு எடுத்துக் கொண்ட போது, அதை  நீங்கள் (அதிமுக,) ஆதரித்ததன் விளைவுதான் டங்ஸ்டன் விவகாரமாக வந்திருக்கிறது. ஒன்றிய  அரசைக் கண்டித்து ஒரு வார்த்தை கூறாமல், தமிழகத்தை குறை கூறுகிறீர்கள் என்றால் யாருடன் கூட்டணி வைத்து நீங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். தமிழ்நாடு அரசு ஒருபோதும் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்காது, வரவே விடாது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால்  முதல்வர் முதல்வராக பதவியில் இருக்கும் வரையில் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம்” என்றும் உறுதிபட தெரி வித்தார்.

வாலிபர் சங்க நிர்வாகியை குறிவைத்து காவல்துறை தாக்குதல்

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு முழு மையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மதுரையில் செவ் வாயன்று நடைபெற்ற மாபெரும் ஊர்வலத்தின் போது, டிஒய்எப்ஐ மாவட்டச் செயலாளர் தமிழரசனை குறிவைத்து, காவல்துறை அராஜ கத்தை அரங்கேற்றியது.  இதற்கு நாடாளுமன்ற மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்க டேசன் தமது சமூகவலைத்தளப் பக்க த்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். “டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை  எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவை யில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டதை முழுமனதாக மேலூர் மக்கள் வரவேற்றுள்ளனர். நேற்று நடந்த பேரணியுமே இத்திட்டத்தை முழுமையாக ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையோடுதான் நடந்தது.  இப்படியான நிலையில் நேற்று (ஜன.7) நடந்த பேரணியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) மதுரை புறநகர் மாவட்டச் செய லாளர் தமிழரசனை மட்டும் காவல் துறை குறிவைத்து இழுத்துச் சென் றது ஏன்?” என்று சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். “மேலூர் சுற்று வட்டாரப் பகுதி களில் இத்திட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து மக்களை ஒருங்கிணைக் கும் பணியில் ஈடுபட்டுள்ளவர் தோழர் தமிழரசன். சமீபத்தில் வாலி பர் சங்கம் நடத்திய மூன்று நாள் நடைபயணத்தின் பொறுப்பாளர் அவர்” என்று கூறியிருக்கும் சு. வெங்கடேசன், “ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய பேரணியில் அவரை மட்டும் வலுக்கட்டாயமாகத் தாக்கி, இழுத்துச் சென்று காவல் துறை வாக னத்தில் ஏற்ற முயன்றது ஏன்?”  என்று கேட்டிருப்பதுடன், “அங்கி ருக்கும் மக்கள் தமிழரசனை காவல் துறையிடமிருந்து மீட்டிருக்காவிட் டால் காவல்துறை தமிழரசனை என்ன செய்திருக்கும் என்கிற கேள்விகள் எழுகின்றன” என்றும் தெரிவித்துள்ளார். “காவல்துறையின் இந்த  அரா ஜக நடவடிக்கை கண்டனத்திற்குரி யது” என்று கூறியிருக்கும் அவர், “சம் பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என்று வலியுறுத்தியுள்ளார்.