districts

img

பரிதாபகரமான நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள்; ரூ.75 லட்சத்தில் காமராஜர் துறைமுக வெள்ளி விழாவா?

திருவள்ளூர், ஜன 8- திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் காமராஜர் துறை முகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாகவே,  குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.  இதுவரை பணி நிரந்தரம் செய்யப்பட்டவில்லை. ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு தலைமையில் தொடர்ந்து போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. நிர்வாகமும், ஒன்றிய பாஜக அரசும் உரிய நட வடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த மாதம் 7ஆம் தேதி அன்று துறைமுகத்தின் வெள்ளி விழா சென்னையில் உள்ள லீமெரிடியன் ஐந்து நட்சத்திர ஹோட்டலில்  நடந்துள்ளது. இந்த விழாவில் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பானந்தா சோனாவால்,  தமிழ்நாடு நெடுஞ்சாலை  மற்றும் துறைமுகத் துறை அமைச்சர் எ.வ.வேலு  ஆகி யோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இவர்களை தவிர  திரைக்கலைஞர் ஆண்ட்ரியா,  விளையாட்டு துறை சார்ந்த வீரர் ஒருவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதற்கான செலவு சுமார் ரூ.75 லட்சம் என்று கூறப்படு கிறது. இதில் காமராஜர் துறைமுகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்க கூடிய தொழிலாளர்கள் யாரையும் அனு மதிக்கவில்லை. சில நூறு பேர் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய ஒரு விழாவுக்கு ரூ.75 லட்சம் செலவிடுவது பொதுத்துறை நிறு வனத்தின் பணத்தை வீணடிக்கும் செயல் என்று  சிஐடியு மாநில துணைத்தலைவர் கே.விஜயன் தெரிவித்துள்ளார். பணிநிரந்தரமின்றி குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த தொழி லாளர்கள் பணியாற்றி வரு கின்றனர். இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் இரவு நேர விருந்துடன் கூடிய விழாவிற்கு  இவ்வளவு பணத்தை துறைமுக நிர்வாகம் செலவிட்டது தேவை யற்றது என்றும் அவர் கூறினார்.