கள்ளக்குறிச்சி ஜன. 8 - கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் பழுதடைந்த பள்ளிக் கட்டிடத்தினை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நடவடிக்கை எடுத்துள்ளார். தலைமை ஆசிரி யர் மற்றும் பொதுமக்களிட மிருந்து வந்த கோரிக்கை யின் அடிப்படையில் செவ்வாயன்று(ஜன.7) பள்ளிக்கு நேரில் சென்ற அவர் பழுதடைந்த கட்டடத்தின் மேற்கூரை யினை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்.உடனடி யாக சீரமைப்பு பணிகளை தொடங்க அவர் உத்தர விட்டார். இந்தப் பள்ளியில் 829 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 2 கட்டி டங்களின் மேற்கூரை பழு தடைந்துள்ளது. மாணவர் களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தற்பொழுது அந்த இரண்டு கட்டிடங்கள் பயன்படுத்தப்படவில்லை. 4 வகுப்பறைகள் கொண்ட 2 கட்டிடங்களின் மேற்கூரை யினை ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் உடனடியாக சீரமைத்து மீண்டும் கட்டிடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்க ஆட்சியர் உத்தரவிட்டார். இதற்கான உரிய திட்ட மதிப்பீட்டினை தயார் செய்து பணியினை உடனடியாக தொடங்கவும் சம்பந்தப்பட்ட அலு வலர்களுக்கு அவர் அறி வுறுத்தினார். இந்த ஆய்வின் போது பள்ளி தலை மையாசிரியர் சங்கர், ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர்கள் அருண் பிரசாத், விஜயன், ஆசிரி யர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.