திருவள்ளூர், ஜன. 8- கோயில் நிலத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்பவர்களை அகற்றுவதை எதிர்த்து சாலை மறியல் நடை பெற்றது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம், நெய்த வாயலில் 65 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரு கின்றனர். இவர்கள் முறை யாக வீட்டு வரி செலுத்தி வருகின்றனர். மின் இணைப்பு பெற்றும் பெற்றுள்ளனர்.அரசு ஆவணங்களும் பெற்றுள்ள னர். இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனக்கு சொந்த மான நிலத்தில் நீங்கள் குடி யிருக்கிறீர்கள்,. எனவே காலி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதனை கண்டித்து தமிழ்நாடு அடிமனை மற்றும் குத்தகை விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி எஸ்.இ.சேகர் தலைமையில் அம்மக்க ளுக்கு ஆதரவாக புதன் கிழமை (ஜன.8) சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. பின்னர் காவல்துறை கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் பேச்சு நடத்தினர். பின்னர் தனி நபரை வெளியேற்றினர். இதனால் தற்போது அமைதி திரும்பியது. கோயில் நிலங்களில் குடி யிருக்கும் சாதாரண மக்களை அரசு பாது காக்க வேண்டும் என வலி யுறுத்தினர்.