districts

img

ஆர். நல்லகண்ணு வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு

சென்னை, ஜன. 8 - நூற்றாண்டைத் தொட்டிருக்கும் கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவரான ஆர். நல்ல கண்ணுவின் களப் போராட்டங்கள் பற்றி  ‘போராட்டமே வாழ்க்கை’ என்ற தலைப்பில் உருவாக்கியுள்ளார் பத்திரி கையாளர் மணா.  இந்நூல், சென்னை, நந்தனத்தில் உள்ள நல்லகண்ணுவின் இல்லத்தில் புதன்கிழமை  (ஜன.8) வெளியிடப்பட்டது. டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் குமார் ராஜேந்திரன் வெளியிட, நல்லகண்ணு பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரான டி.ராஜா அடுத்த பிரதியைப் பெற்றுக் கொண்டார். அப்போது நூலாசிரியரும், எழுத்தாளருமாகிய மணா, டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கல்லூரியின் நிர்வாகி அனீஸ் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.