districts

img

யுஜிசி புதிய விதிகளுக்கு எதிர்ப்பு

மாநில உரிமையை பறிக்கும் வகையில், பல்கலை. துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை, ஆளுநரே நியமிக்க அதிகாரமளித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. இதனை திரும்ப பெறக்கோரியும், பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க தடையாக உள்ள ஆளுநரை கண்டித்தும் புதனன்று (ஜன.8) மாநிலக்கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, யுஜிசி அறிவிப்பு மற்றும் ஆளுநர் உருவப்படத்தை மாணவர்கள் எரித்தனர். மாநிலக்கல்லூரி கிளைத் தலைவர் சுபஸ்ரீ தலைமையில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் மத்தியசென்னை மாவட்டச் செயலாள தமிழ், கிளைச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.