districts

திருச்சி முக்கிய செய்திகள்

குமரி மாவட்டத்தில் டீ கடைகளுக்கு இரவு 11 மணிக்கு மேல் தடை

நாகர்கோவில். ஜன. 7- குமரி மாவட்டத்தில் டீ கடைகள் இரவு 11 மணிக்கு மேல் இயங்க போலீசார் தடை விதித்துள்ளனர். குமரி மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி. யாக ஆர்.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். அவர் பல்வேறு அறிவுறுத்தல்களை போலீசாருக்கு வழங்கி வருகிறார். மாவட்டத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து அனைவரிடமும் விசாரிக்கின்றார். இந்நிலையில், பேலீசார் குமரி மாவட்டத்தில் 11 மணிக்கு மேல் இயங்கும் அனைத்து கடைகளையும் அட்டவணயைிட்டு கொடுத்தனர். அந்த கடைகளால் மக்களுக்கு ஏற்படும் அபாயத்தினையும் கூறினர். அதனால் இரவு நேரங்களில் மது போதையில் உள்ள இளைஞர்கள் இந்த கடைகளுக்கு சென்று பல நேரங்களில் தகராறில் ஈடுபடுவதும் தெரியவந்தது. இதனை தடுக்க இரவு 11 மணிக்கு மேல் இயங்கும் டீ கடைகளுக்கு போலீசார் சென்று இனிமேல் 11 மணிக்கு மேல் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகள் இயங்க கூடாது மீறுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினர்.

விமானம், ஏற்றுமதி, சுற்றுலா பயிற்சி: எஸ்.சி/எஸ்.டி இளைஞர்களுக்கு அழைப்பு

நாகர்கோவில், ஜன. 7- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆ திதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் (IATA-NDA) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை படிப்பு (Air Cargo Introductory+ DGR) சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அடிப்படை படிப்பு (Passenger Ground Services+ Reservation Ticketing) சுற்றுலா துறையின் அடிப்படை படிப்புகள் மற்றும் விமான பயண முன்பதிவு (Foundation in Travel and Tourism) போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சியினை பெற பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 18 முதல் 23 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்,  இப்பயிற்சிக்கான காலஅளவான ஆறு மாதமும் விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகையான ரூ.95,000/-த்தை தாட்கோவால் மேற்கொள்ளப்படும். இப்பயிற்சியினை வெற்றிதரமாக முடிக்கும் பட்சத்தில் ஐஏடிஏ (International Air Transport Association-Canada) மூலம் அங்கீரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தனியார் விமான நிறுவனங்களிலும் (Indigo, Airlines, Spice Jet, Go First, Air India), சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும், நட்சத்திரவிடுதிகளிலும், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலா துறையிலும் வேலைவாய்ப்பு பெறலாம். ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.20,000 முதல் ரூ.22,000 வரை பெறுவதற்கு வழிவகை செய்யப்படும், பின்னர் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை ஊதிய உயர்வு பெறலாம். இத்திட்டத்தின் கீழ் 55 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு முதற்கட்டமாக 46 நபர்கள் முன்னனி விமான நிறுவனங்கள் மற்றும் சேவை மையங்களான Indigo, Air India, Menzies,Bird Aviation,Hyundai, iGo Tours, Wings vacation, Zenith Tours, Alhind Tours & Money Exchange போன்றவைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கன்னியாகுமரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

ஜன.10: நாகர்கோவிலில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்; ஆட்சியர் அழைப்பு

நாகர்கோவில், ஜன. 7- மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் ஜன.10 வெள்ளியன்று காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வேலைவாய்ப்பு முகாமில் கன்னியாகுமரி மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக வருகை புரிந்து தங்களுடைய நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடையவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள 10.01.2025 அன்று காலை 10 மணிக்கு கோணம், நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  மேலும், இம்முகாமின் மூலம் தனியார்துறையில் தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.  இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள  வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் “தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்”  Tamil Nadu Private Job Portal”  (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறும், கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே, இச்சேவையை பொதுமக்களும், நிறுவனங்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து நேரம் நீட்டிப்பு

நாகர்கோவில். ஜன. 7- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15, 16, 17, ஆகிய 3 நாட்கள் சுற்றுலா படகுகள் இயக்கம் 3 நாட்களுக்கு மட்டும் தினசரி 5 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழகம் அறிவித்துள்ளது.

வியாபாரியை வெட்டிய சிறுவன்  உள்பட 3 பேர் கைது 

திருநெல்வேலி, ஜன. 7- நெல்லை, மேலப்பாளையம்  குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் ( 45). இவர் குறிச்சி முக்கு பகுதியில் கடை நடத்தி வருகிறார். திங்கட்கிழமை மதியம் கடை முன்பு சொக்கலிங் கம் நின்று கொண்டிருந்தா போது பைக்கில் வந்த 3 பேர் அவரை அரிவாளால் வெட் டிவிட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த சொக்க லிங்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட் டுள்ளார். மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்த போது டவுன் மேலநத்தம் பகுதியை சேர்ந்த பொன் ராஜ், காந்திராஜ் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேர் சொக்கலிங்கத்தை வெட்டியது தெரியவந்தது. இதைய டுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் ஞாயிறன்று சொக்கலிங்கம் கடைக்கு வந்து பணம் கொடுக்காமல் சிகரெட் கேட்டுள்ளனர். அதற்கு அவர் கொடுக்க மறுத்துள் ளார். இதனால் அவரை வெட்டி இருக்கலாம் என்று கூரபடுகிரது.

ஜன.10: மீனவர்  குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி, ஜன. 7- தூத்துக்குடியில் வருகிற 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் 10.01.2025 ஜனவரி இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் வைத்து முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பதிவு செய்த சமூக ஆர்வலர்கள் / ஊர்த்தலைவர்கள் / மீனவர்கள் அனைவருக்கும், பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும். அப்பொருள் மீதான கருத்துக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அங்கேயே பெறப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஆட்சியர் க.இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதார் அட்டைகளை எடைக்கு போட்ட விவகாரத்தில்  துறை ரீதியாக நடவடிக்கை : அஞ்சல் அதிகாரிகள் தகவல் 

திருநெல்வேலி, ஜன. 7- நெல்லை மாவட்டம் காவல்கிணறு கணபதியாபுரத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் பழைய இரும்பு உள்ளிட்ட பொருட்கள் சேகரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு வடக்கன்குளம் தனியார் பள்ளி அருகில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பழைய பேப்பர்கள், புத்தகங்கள் உ உள்ளிட்ட வைகளை எடைபோட்டு எடுத்து வந்தார். கடையில் வைத்து பிரித்து பார்த்த போது அதில் புதிதாக 153 ஆதார் கார்டுகள், 13 வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளிட்டவை இருந்தன.அதனை எடுத்து பார்த்தபோது அவை முழுவதும் காவல்கிணறு மற்றும் ஆவரைகுளம் பகுதியை சேர்ந்தவர்களின் முகவரிகள் இருந்தது. இதுதொடர்பாக சரவணன், பணகுடி போலீஸ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தார். உடனே அவர்களும் வந்து ஆதார், வாக்காளர் அட்டைகளை ஆய்வு செய்தனர். பின்னர் அந்த பொருட்களை எடுத்துவந்த வடக்கன்குளம் பகுதியில் உள்ள வீட்டில் சென்று விசாரித்தபோது. அதில் தற்காலிக தபால்காரராக அந்த வீட்டில் வசித்து வரும் ஒரு நபர் வேலை பார்த்து வருவதும், அவர் பணிகளில் இருந்த நாட்களில் வந்த இந்த ஆவணங்களை முறையாக உரியவர்களிடம் ஒப்படைக் காமல் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரவணன் தெரிவித்தார். ஆனால் இதுகுறித்து புகார் அளிக்க வருவாய்த்துறையினரோ, தபால்துறையினரோ முன்வரவில்லை. இதனால்பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட அந்த தற்காலிக தபால்காரர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீ சார் திணறி வருகின்றனர்.இதுதொடர்பாக அஞ்சல்துறை அதிகாரிகள் கூறுகையில், இதில் புகாருக்கு உள்ளான தற்காலிக தபால்காரரிடம் விசாரணை நடத்தி அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கிடைத்த அனைத்து ஆதார் மற்றும் வாக்காளர் அட்டைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றனர்

தாம்பரம் - நெல்லை சிறப்பு  ரயில் நேரம் மாற்றம்

திருநெல்வேலி, ஜன. 7- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படவிருந்த சிறப்பு ரயில் ஒரு மணி நேரம் முன்னதாக புறப்பட்டுச் செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே  வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது- : தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு ஜன. 13, 20, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண் 06091) இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என முன்ன தாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தாம்பரம்-திருச்சி இடையே ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைய டுத்து தாம்பரத்திலிருந்து ஒரு மணி நேரம் முன்னதாக பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டுக்கு பிற்பகல் 2.58 மணிக்கும், மேல்மருவத்தூருக்கு பிற்பகல் 3.23-க்கும், விழுப்புரத்துக்கு மாலை 5.15-க்கும், விருத்தாசலத்துக்கு மாலை 6.13-க்கும், அரியலூருக்கு இரவு 7 மணிக்கும், ஸ்ரீரங்கத்துக்கு இரவு 7.53-க்கும், திருச்சிக்கு இரவு 8.35-க்கும் சென்றடையும். திருச்சியிலிருந்து இரவு 8.45-க்கு புறப்படும் ரயில் திண்டுக்கல், மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, சேரன்மகாதேவி வழியாக முன் னர் அறிவிக்கப்பட்ட நேரப்படி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்கை : ஜன.31ஆம் தேதி வரை நீட்டிப்பு

தூத்துக்குடி, ஜன. 7- ஏரலில் புதிதாக துவக்கப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் நேரடி சேர்கை ஜன.31ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் புதிதாக துவக்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை மேற்கொள்ள 31.12.2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 31.01.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு/2021-ல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பின் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல். விண்ணப்பக்கட்டணம்: விண்ணப்பக்கட்டணம் ரூ.50/-மட்டுமே. ஏரல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8-ஆம் வகுப்பு/பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் ஒரு நகல்களுடன் திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்து உடன் சேர்க்கையினை உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஏரல் அரசு தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை தொடர்பாக 99525 56469, 94882 01582, 94990 55813, 94990 55812 அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் ஏரல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், சீருடை, காலணி, பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள், கட்டணமில்லா பஸ் பாஸ், இலவச சைக்கிள், வழங்கப்படும். மேலும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் வருகைக்கேற்ப உதவித் தொகை .ரூ.750, மற்றும் தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் தகுதியுள்ள மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கூடுதல் உதவித் தொகையும் வழங்கப்படும் என ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

லஞ்ச வழக்கில் தொழிலாளர் உதவி ஆய்வாளருக்கு  3 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி, ஜன. 7- தராசு முத்திரையிட உரிமம் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மேற்கு தோப்பு தெருவைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (66). இவர் தராசு  முத்திரையிடுவதற்கான உரிமம் பெறுவதற்காக புதிதாக விண்ணப்பித்தார். இதற்காக கடந்த 20.3.2013 அன்று திருச்செந்தூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் காளிராஜை சந்தித்தார். அப்போது காளிராஜ் தராசு முத்திரையிடுவதற்கான உரிமம் வழங்குவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் தருமாறு முத்துராமலிங்கத்திடம் கேட்டார். அதற்கு அவர் மறுநாள் பணத்தை கொண்டு வந்து தருவதாக கூறி சென்று விட்டார். எனினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்துராமலிங்கம், இதுகுறித்து தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில், மறுநாள் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்தை முத்துராமலிங்கம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் காளிராஜிடம் சென்று கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக காளிராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி தலைமை குற்றவியில் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வசித்குமார், குற்றம் சாட்டப்பட்ட காளிராஜிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து  தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜென்சி ஆஜரானார்.

உடல் உறுப்புகளை தானம் பெறுவதில் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மாநில அளவில் 3ஆம் இடம்!

திருநெல்வேலி, ஜன. 7- உடல் உறுப்புகளை தானம் பெறுவதை வலியுறுத்தி தமிழக அரசு மாநில அளவில் தொடர்ந்து பல் வேறு பிரசாரங்கள் மேற் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக அகில இந்திய அளவில் உடல் உறுப்பு தானம் செய்வ தில் தமிழகம் முன்னிலை பெற்று வருகிறது. அந்தவகையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையிலும் உடல் உறுப்பு தானம் பெறுவது அதிகரித்து வருகிறது. விபத்து போன்ற நிகழ் வுகளில் மூளைச் சாவு அடைந்தவர்கள் உடல் முக்கிய உறுப்புகள் அவர்க ளது உறவினர்களின் ஒப் புதல் உடன் தானமாக பெறப்பட்டு, தேவைப்படும் நபர்களுக்கு பொருத் தப்பட்டு அவர்கள் பயன டைந்து வருகின்றனர். நெல்லை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் 27 உடல் உறுப்புகளும் 25 திசுக் களும் என மொத்தம் 52 உறுப்புகள் தானமாக பெற்று தமிழக அளவில் தேவைப்படும் பலருக்கு பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டில் தமிழக அளவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற் கொள்ளப்பட்ட உறுப்பு தான பணியில் 3வது இடத்தை பெற்றது. இதுபோல் நெல்லை அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் கடந்த 2019ம் ஆண்டு முதல் கடந்த 2024ம் ஆண்டு இறுதி வரை மொத்தம் 59 உறுப்புகளும் 42 திசுக்களுக்கு தானமாக பெறப் பட்டுள்ளதாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக் டர்ரேவதி பாலன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

விபத்தில் மூளைச்சாவு அடைந்த  தனியார் நிறுவன ஊழியர் உடல் உறுப்புகள் தானம்

திருநெல்வேலி, ஜன. 7- தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் வேல் குமார் ( 48). இவரது மனைவி சேர்மராணி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். வேல் குமார் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மின்சார பிரிவில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி காலை நாசரேத்தில் இருந்து ஆறுமுகநேரிக்கு வேலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் சுயநினைவை இழந்த வேல்குமார் காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்து பார்த்த போது அவரது மூளை செயலிழந்து விட்டதை அறிந்த டாக்டர்கள் வேல் குமாரின் உறவி னர்களிடம் தெரிவித்தனர். பின்னர் அவரது உறவினர்கள் தாங்களாக முன்வந்து வேல் குமாரின் கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கருவிழிகள், தோல் உள்ளிட்டவற்றை தானமாக அளிக்க தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வேல் குமாரின் உடலில் இருந்து பாகங்கள் எடுக்கப்பட்டது. தொடர்ந்து  செவ்வாய்க்கிழமை மதியம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இறுதி மரியாதை உடன் வேல் குமாரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகங்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. கருவிழிகள் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கும், தோல்கள் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.