tamilnadu

img

வேட்பு மனு தாக்கல் - விடுமுறை நாட்களில் அனுமதி இல்லை!

ஈரோடு,ஜனவரி.08- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய 3 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   
ஈரோடு கிழக்கும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 2ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய  ஜனவரி 10-17 வரை காலவகாசம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜன. 10, 13,17 ஆகிய 3 தேதிகளில் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி எனவும் பொங்கல் அரசு விடுமுறை நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது எனவும் ஈரோடு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.