தருமபுரி, ஜன.7- நீண்ட காலமாக நிலுவையி லுள்ள கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும், என வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள ஊராட்சிச் செயலர் உள் ளிட்ட அனைத்து நிலை பணியிடங்க ளையும் உடனடியாக நிரப்ப வேண் டும். ஊராட்சிச் செயலர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரை யறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள் ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத் தினர் செவ்வாயன்று மாநிலம் தழு விய சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதி யாக, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியலுக்கு, சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஆர்.ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில் மாவட் டத் தலைவர் முகமது இலியாஸ், செயலாளர் தருமன், பொருளாளர் வினோத் குமார், மாநில செயற் குழு உறுப்பினர் பிரின்ஸ் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளி நாதன் வாழ்த்திப் பேசினார். முடி வில், மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். சேலம் சேலம் கோட்டை மைதானத் தில் மறியல் போராட்டம் நடைபெற் றது. இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் ந.திருவேரங்கன், மாவட் டத் தலைவர் செந்தில், மாவட்டச் செயலாளர் ஜான் ஆஸ்டின், மாவட் டப் பொருளாளர் வடிவேல், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், ஊரக வளர்ச்சித்துறை ஓய் வூதியர் சங்க மாநில துணைத்தலை வர் சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், அனைவரையும் காவல் துறை யினர் கைது செய்தனர். உதகை நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி பகுதியில் சாலை மறியல் போராட் டம் நடைபெற்றது. இப்போராட் டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார். நீலகிரி மாவட்டத்திற் கான மாநிலப் பொறுப்பாளர் செந் தில்குமார், முன்னாள் தலைவர் கரு ணாகரன், அப்பாதுரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசி னர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடு பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கோவை இதேபோன்று கோவை ஆட் சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற சாலை மறியல் போராட்டத் திற்கு, மாவட்டச் செயலாளர் விஜய குமார் தலைமை வகித்தார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் முரு கேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத் தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.