கோயம்புத்தூர், ஜன. 8 - வர்க்கப்போராட்டத்தில் சமரச மின்றி போராடி தூக்குக்கயிற்றை முத்தமிட்டு, ஒரே புதைகுழியில் விதைக்கப்பட்ட ராமையன், ரங்கண்ணன், வெங்கடாச்சலம், சின் னையன் ஆகிய சின்னியம்பாளை யம் தியாகிகளின் 79-ஆவது ஆண்டு நினைவு தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புத னன்று எழுச்சியுடன் கடைப்பிடிக்கப் பட்டது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி களின் ஊழியர்கள் பங்கேற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி, மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், மாநி லக்குழு உறுப்பினர் அ. ராதிகா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பி னர் பி.ஆர். நடராஜன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லப் பொருளாளர் எம். ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் த. லெனின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.