நாகர்கோவில். ஜன. 7- மாநில அளவில் நடந்த தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற பெண் உதவி ஆய்வாளருக்கு குமரி மாவட்ட எஸ்.பி., ஆர்.ஸ்டாலின் நேரில் வாழ்த்த கூறினார். தமிழ்நாடு முதுநிலை தடகள சங்கமும்,மதுரை மாவட்ட முதுநிலை தடகள சங்கமும் இணைந்து நடத்திய 45 ஆவது மாநில அளவிலான தடகள போட்டியானது கடந்த 03.01.2025 ஆம் தேதி முதல் 05.01.2025 வரை மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இப்போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளர் கீதா 100 மீட்டர், போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று போட்டிகளிலும் முதல் பரிசு பெற்றார். வெற்றி பெற்ற அவரை, மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.