districts

img

தமிழக ஆளுநரைக் கண்டித்து தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜன. 7- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகம் முன்பு நடந்தது. தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் தமிழக ஆளுநரை கண்டித்து தமிழக முழுவதும் திமுக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்தது. இவ்வார்ப்பாட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ் தலைமை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில,மாவட்ட மாநகர பகுதி நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆளுநரை எதிர்த்து கோஷமிட்டனர்.