திருப்பூர், ஜன. 6- திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாணவர்க ளுக்கு புத்தகம் வாங்க 500 சேமிப்பு உண்டியல்களை மாநக ராட்சி துணை மேயர் வழங்கினார் தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப் பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் இணைந்து நடத்தவுள்ள 21 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 23 தொடங்கி பிப்ரவரி 2 வரை நடைபெற உள்ளது. இதையொட்டி திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் சார்பாக வாசிப்பு பழக்கத்தை ஊக்கப் படுத்தி மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிக ளையும் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு நிகழ்வாக மாணவர் கள் எல்லாரும் அவசியம் புத்தகத்தை வாங்கி படிக்க வேண் டும் என்ற நோக்கத்தில் சேமிப்பு உண்டியல்கள் மூலம் புத்தக சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கு பல்வேறு புரவலர்கள் மூலம் மாணவர்களுக்கு இலவசமாக சேமிப்பு உண்டியல்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, திங்களன்று திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளிக்கு துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியம் அவர்கள் 500 மாணவர்களுக்கான உண்டியல்களை நன்கொடையாக வழங்கினார். மேலும் புத்தக வாசிப்பின் அவசியம் பற்றியும், திருப்பூர் புத்தகத் திருவிழா குறித்தும் மாணவர்களுடன் எடுத்து ரைத்தார். இந்நிகழ்வில் தலைமையாசிரியர் அங்குலட்சுமி வர வேற்றார். திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் சார்பாக உறுப்பி னர்கள் ஆ.ஈஸ்வரன், பா.கனகராஜா, வி. ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர், கௌரிசங்கர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். அறிவியல் இயக்க பொறுப்பாளர் கிருத்திகா நன்றி கூறினார்.