districts

img

கோச்சிங் சென்டர் வைத்து போலி அரசுப் பணி அணை பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பல்

திருப்பூர், ஜன.6- கோச்சிங் சென்டர் வைத்து மத்திய அரசு  பணி வழங்கப்பட்டுள்ளது போல், போலியாக  அரசாணை வழங்கி மோசடியில் ஈடுபட்ட சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் திங்களன்று மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மனு அளிக்க வந்த  மோகன் தாஸ் என்பவர் கூறுகையில், நான் தேனி  மாவட்டத்தை சேர்ந்தவன். 2017 ஆம் ஆண்டு  மெக்கானிக்கல் பொறியியல் படிப்பில் டிப் ளமோ படிப்பு படித்துள்ளேன். கடந்த 2020  ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் செவ்வந்தம் பாளையத்தில் இயங்கி வந்த ஸ்ரீ சிவன் (ஆர்மி) கோச்சிங் செண்டர் என்கிற பெயரில்  மத்திய அரசு பணிகளான ஆர்மி, சிஆர்பிஎப்,  பிஎஸ்எப், உட்பட அரசுப்பணிகளில் சேர பயிற்சி அளிக்கப்படுவதாக கவர்ச்சிகரமான விளம்பரத்தை கண்டு, குவேந்திரன் என்ப வரை தொடர்புகொண்டேன். அவர் தான் ஒரு  எல்லை பாதுகாப்பு படை அதிகாரியாக பணி யாற்றியதாகவும், தனக்கு மாநில மற்றும் மத் திய அரசு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், பயிற்சி மையத் தில் சேர்ந்தால் மூன்றே மாதத்தில் அரசு பணி  உறுதியாக கிடைக்கும் என உறுதியளித்தார்.  இதைதொடர்ந்து, ஸ்ரீ சிவன் ஆர்மி கோச்சிங் சென்டரில் ரூ.35 ஆயிரம் கட்டணம் செலுத்தி, தினமும் காலை மாலை பயிற்சி மேற்கொண்டேன். என்னுடன் 30 பேர் பயிற் சியில் ஈடுபட்டனர். மூன்று மாதம் பயிற்சி அளித்தனர். இதையடுத்து வேலை குறித்து  குவேந்திரனிடம் கேட்டபோது 2000 பேருக்கு  அரசு வேலை வாங்கி தந்திருப்பதாகவும், மத்திய அரசு பணியில் சேர ரூ.15 லட்சம்  செலுத்த வேண்டும் என கூறினார். இதைய டுத்து, எனது தந்தை பால்பாண்டியை தொடர்பு கொண்டு, கடந்த 2020 ஆம் ஆண்டு  செப்.7 ஆம் தேதி ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்,  அக்.7 ஆம் தேதி ரூ.1 லட்சம். 2021 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம்,  மார்ச் 24 ஆம் தேதி ரூ. 2 லட்சம், ஸ்ரீ சிவன்  கோச்சிங் சென்டர் வங்கி கணக்கில் பெற்று கொண்டனர். மொத்தமாக ரூ.13 லட்சத்தை குவேந்திரன் பெற்றுக்கொண்டார்.  இதையடுத்து, குவேந்திரன் உள்ளிட்ட சிலர் மருத்துவ பரிசோதனைக்கு புது தில்லி  எய்ம்ஸ் மருத்துவமனைக்கு என்னை அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண் டனர். என்னுடன் 4 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் பஞ்சாப் மாநிலம்  பெராஸ்பூரில் பணியாற்ற அங்கு அழைத்துச் சென்று இந்திய உணவு பாதுகாப்பு கழகத் தில் வேலை செய்ய வேண்டும் என கூறினர்.  அங்கு அதித்தி ஹோட்டலில் தினமும் ரூ.700  வாடகைக்கு தங்க வைத்தனர். பின்னர் தினந் தோறும் ரூ.150 வாடகை கொடுத்து ஆட்டோ வில் அங்குள்ள குடோனுக்கு சென்று இரவு காவலாளியாக வேலை செய்தோம். இது குறித்து குவேந்திரனை தொடர்புகொண்டு கேட்டபோது அடிப்படை தகுதிகளை வளர்த் தால் தான் அதிகாரியாக முடியும் என கூறி னார். பின்னர் பயிற்சி முடிந்ததாகவும், பணி  ஆணை விரைவில் வீடு தேடி வரும் என கூறி  அனுப்பினார். வீட்டிற்கு வந்தபோது பணியாணை வந்தி ருந்தது. ஆனால் ஆணை மீது சந்தேகம் வந்து  விசாரித்தபோது போலியானது என தெரிய வந்தது. இதனையடுத்து குவேந்திரனை திருப்பூருக்கு எனது தந்தையுடன் நேரில் சென்று கேட்டபோது பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறி ரூ.5.50 லட்சத்திற்கு காசோலை வழங்கினார். காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லா மல் திரும்பியது. இதையடுத்து திருப்பூரில் உள்ள குவேந்திரன் வீட்டிற்கு சென்று கேட்ட போது உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டி  மூலமாக சென்னையை சேர்ந்த பிரசாத்கு மார் என்பவரிடம் பணம் கொடுத்திருப்பதாக கூறினார். இதனிடையே திருப்பூரை சேர்ந்த  செல்வம் என்பவர் எனது தந்தையை தொடர் புகொண்டு தனக்கு அதிகாரிகள் மட்டத்தில்  நல்ல பழக்கம் உள்ளதாகவும், குவேந்திரனி டம் இருந்து பணத்தை பெற்றுத்தருவதாக கூறி காலம் கடத்தி வந்தார். என்னை போல்  200க்கும் மேற்பட்டவர்கள் மீது இதுபோல் மோசடி செய்துள்ளனர். சிலர் தான் ஏமாற்றப் பட்டது தெரிந்து தற்கொலை செய்து கொண்ட னர். கோச்சிங் சென்டர் என்கிற பெயரில் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை  எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க  வந்துள்ளதாக தெரிவித்தார். இவருடன் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வெயில் முத்து என்பவரும் தனக்கு  குவேந்திரன் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக வாரணாசி வரை அழைத்து சென்று, தங்க வைத்து ரூ.9 லட்சம் வரை பெற்றுக் கொண்டு போலியான மத்திய  அரசு பணி ஆணை வழக்கி ஏமாற்றியதாக மனு அளித்தார்.