திருப்பூர், ஜன.6 – திருப்பூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் திங்களன்று வெளியிடப்பட் டது. இதில் இந்த மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஆண் கள் 11 லட்சத்து 82 ஆயிரத்து 905 பேர், பெண்கள் 12 லட்சத்து 32 ஆயிரத்து 351 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தார் 352 பேர் என மொத்தம் 24 லட்சத்து 15 ஆயி ரத்து 608 வாக்காளர்கள் உள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீக ரிக்கப்பட்ட அரசியர் கட்சியினர் முன்னி லையில் வெளியிட்டார். ஏற்கெனவே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியி டப்பட்டு அதன் பிறகு கடந்த அக்டோபர் 29 முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை ஒரு மாத காலம் சிறப்பு முகாம்கள் நடத்தி யும், இணையவழியாகவும் வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்கள் பெறப்பட்டன. பெயர் சேர்த்தல், திருத்தத்திற்கு 50 ஆயிரத்து 511 மனுக்களும், பெயர் நீக்கத்துக்கு 17ஆயிரத்து 723 மனுக்க ளும் பெறப்பட்டு கள ஆய்வுக்குப் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டமன்றத் தொகு திகளுக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி தாராபுரம் (தனி) தொகுதியில் ஆண்கள் 1,27,443 பேர், பெண்கள் 1,36,336 பேர், மூன்றாம் பாலினத்தார் 11 பேர் என மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 790 வாக்காளர் கள் உள்ளனர். காங்கேயம் தொகுதி யில் 1,28,669 ஆண்கள், 1,37,555 பெண் கள், 24 மூன்றாம் பாலினத்தார் என மொத் தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 248 வாக்கா ளர்கள் உள்ளனர். அவிநாசி (தனி) தொகுதியில் ஆண்கள் 1,41,637 பேர், பெண்கள் 1,51,172 பேர், மூன்றாம் பாலி னத்தார் 8 பேர் என மொத்தம் 2 லட்சத்து 92 ஆயிரத்து 817 பேர் உள்ளனர். திருப்பூர் (வடக்கு) தொகுதியில் 2,02,061 ஆண்கள், 1,99,688 பெண்கள், 171 மூன்றாம் பாலினத்தார் என மொத் தம் 4 லட்சத்து ஆயிரத்து 920 பேர் உள்ள னர். திருப்பூர் (தெற்கு) தொகுதியில் 1, 35,688 ஆண்கள், 1,36,029 பெண்கள், 32 மூன்றாம் பாலினத்தார் என மொத்தம் 2 லட்சத்து 71 ஆயிரத்து 749 பேர் உள்ள னர். பல்லடம் தொகுதியில் ஆண்கள் 2,01,897, பெண்கள் 2,08,117 பேர், மூன் றாம் பாலினத்தார் 57 பேர் உள்பட மொத்தம் 4 லட்சத்து 10 ஆயிரத்து 71 வாக்காளர்கள் உள்ளனர். உடுமலை பேட்டையில் ஆண்கள் 1,28,771 பேர், பெண்கள் 1,40,116 பேர் மற்றும் மூன் றாம் பாலினத்தார் 31 பேர் என மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 918 பேர் உள்ள னர். மடத்துக்குளம் தொகுதியில் 1,16,739 ஆண்கள், 1,23,338 பெண்கள், மூன்றாம் பாலினத்தார் 18 பேர் என மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 95 பேர் உள்ளனர். மேற்கண்ட எட்டு சட்டமன்றத்தொகு திகளில் மொத்த ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 82 ஆயிரத்து 905 பேர், பெண் வாக்காளர்கள் 12 லட்சத்து 32 ஆயிரத்து 351 பேர், மூன்றாம் பாலினத்தார் 352 பேர் என மொத்தம் 24 லட்சத்து 15 ஆயிரத்து 608 பேர் உள்ளனர். இந்த இறுதி வாக்காளர் பட்டி யல்கள் அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள், வாக்குச்சாவடி அமைவிடங்களில் பொது மக்கள் பார் வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என்று ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித் தார்.