districts

img

இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோவை, ஜன.6- இறுதி வரைவு வாக்காளர் பட்டி யல் திங்களன்று வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் சிறப்பு  சுருக்கமுறை திருத்தம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பெயர்  நீக்க, முகவரி மாற்றம் திருத்தம் செய் யும் பணிகள் அக்டோபர், நவம்பர்,  டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள்  மேற்கொள்ளப்பட்டன. மொத்தம் 1, 44,000 மனுக்கள் நேரடியாகவும்,  ஆன்லைன் வாயிலாகவும் பெறப் பட்டு, அந்த மனுக்கள் பரிசீலனை  செய்யப்பட்டு, கள ஆய்வு மேற்கொள் ளப்பட்டு, உறுதியான தகவல்களை  இறுதி செய்து அவற்றை வாக்காளர்  பட்டியலில் இணைக்கும் பணிகளை  மாவட்ட தேர்தல் பிரிவு பணியாளர் கள் மேற்கொண்டனர். இதனையடுத்து, இறுதி வரைவு  வாக்காளர் பட்டியல் திங்களன்று  வெளியிடப்பட்டது. இதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள  10 சட்டமன்ற தொகுதிகளுக்கான  இறுதி வாக்காளர் பட்டியலை  மாவட்ட தேர்தல் அலுவலரும்,  மாவட்ட ஆட்சியருமான கிராந்தி  குமார் பாடி அங்கீகரிக்கப்பட்ட கட்சி களின் முன்பு திங்களன்று வெளி யிட்டார். வரைவுப் பட்டியலின் படி, மாவட்டத்தில் 15,58,673 ஆண் வாக் காளர்கள், 16,26,259 பெண் வாக்கா ளர்கள் மற்றும் 657 மூன்றாம் பாலின  வாக்காளர்கள் உள்ளனர். இதில் மேட்டுப்பாளையம், சூலூர், கவுண் டம்பாளையம், கோவை வடக்கு,  தொண்டாமுத்தூர், கோவை தெற்கு,  சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய  10 தொகுதிகளையும் சேர்த்து மொத் தம் 31,85,554 வாக்காளர்கள் உள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது. உதகை உதகை மாவட்ட ஆட்சியர்‌  அலுவலகத்தில்‌ மாவட்ட தேர்தல்‌  அலுவலரும், ‌மாவட்ட ஆட்சியரு மான லட்சுமி பவ்யா அங்கீகரிக்கப் பட்ட அரசியல்‌ கட்சிகளின் ‌பிரதிநிதி கள் ‌முன்னிலையில் ‌இறுதி வாக்கா ளர்‌ பட்டியலை வெளியிட்டார். இப் பட்டியலின்படி, நீலகிரி மாவட்டத் தில்‌ 2,79,201 ஆண் ‌வாக்காளர்களும்‌,  3,05,041 பெண்‌ வாக்காளர்களும்‌, 18  மூன்றாம்‌ பாலினத்தவரும் ‌இடம் பெற்றுள்ளனர்‌. இதில், உதகை, கூட லூர், குன்னூர் ஆகிய 3 தொகுதிக ளையும் சேர்த்து மொத்தம் ‌‌‌1,90,543 வாக்காளர்களும் ‌இடம் ‌பெற்றுள்ள னர்‌. கடந்த 29.10.2024 அன்று வெளி யிடப்பட்ட வரைவு வாக்காளர்‌ பட்டிய லில் ‌இடம் பெற்றிருந்த வாக்கா ளர்களை விட 5299 வாக்காளர் கள்‌ அதிகமாக உள்ளனர்‌.  ஈரோடு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவ லரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ  கோபால் சுன்கரா, அங்கீகரிக்கப் பட்ட அரசியல்‌ கட்சிகளின் ‌பிரதிநிதி கள் ‌முன்னிலையில் ‌இறுதி வாக்கா ளர்‌பட்டியலை வெளியிட்டார். இப் பட்டியலின்படி, ஈரோடு மாவட்டத் தில் 955356 ஆண் வாக்காளர்களும், 10,21,871 பெண் வாக்காளர்களும்,  192 மூன்றாம்‌ பாலினத்தவரும் ‌இடம் பெற்றுள்ளனர்‌. இதில், ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக் குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தி யூர், கோபிசெட்டி பாளையம், பவா னிசாகர் ஆகிய 8 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 19,77,419 வாக்கா ளர்களும் இடம் ‌பெற்றுள்ளனர்‌.