districts

img

அடையாள அட்டை இல்லாமல் அவதிக்குள்ளாகும் அறிவொளி நகர் நரிக்குறவர் இன மக்கள்

திருப்பூர், ஜன.6-  ஆதார் அட்டை, நியாய விலை கடை  அட்டை உள்ளிட்ட அரசு அடையாள அட்டை கள் இல்லாததால், குழந்தைகளை பள்ளிக ளில் சேர்க்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளா வதாக, அறிவொளி நகர் நரிக்குறவர் இன மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலை மையில் திங்களன்று ஆட்சியரகத்தில் மக்கள்  குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு தரப்பினர் ஆட்சியரிடம் மனு  அளித்தனர். இதில், பல்லடம் தாலுகா அறி வொளி நகர் பகுதியில் வசித்து வரும் நரிக்குற வர் இன மக்கள் அளித்துள்ள மனுவில் தெரி வித்துள்ளதாவது, மேற்படி பகுதியில் 150 நரிக் குறவர்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து  வருகின்றோம். இதில் பலருக்கு ஆதார்  அட்டை, நியாய விலை கடை அட்டை, வாக்கா ளர் அட்டை உள்ளிட்ட எந்த அரசு அடையாள அடையும் வழங்கப்படவில்லை. இதனால், அரசின் திட்டங்கள் பெற முடியவில்லை. குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க முடிய வில்லை. மேலும், பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். குழந்தைகளின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக ஆதார் அட்டை நியாய விலை கடை  அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை  வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.  பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு திருப்பூர் மாநகராட்சி கலைஞர் கருணா நிதி பேருந்து நிலையத்தில் சிலர் கஞ்சா,  மது உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன் படுத்திவிட்டு, பேருந்து நிலையத்திற்கு  வரும் மாணவர்கள் மற்றும பொதுமக்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் பய ணிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும், இன்னும் சில நாட்களில் பொங்கல்  திருவிழா வருவதை கருத்தில் கொண்டு, பய ணிகளின் உடமைகளை பாதுகாக்கும் வகை யில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தியாகி குமரன் பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் மனு  அளிக்கப்பட்டுள்ளது.  ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடுக  தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வில்  தேர்ச்சி பெற்றவர்கள், மற்றொரு (டிஎன் எஸ்ஜிடி) தேர்வு மூலம் ஆசிரியர்களாக தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என 2018 ஆம்  ஆண்டு தமிழ்நாடு அரசாணை வெளியிட்டது.  அதன்படி 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு எழுதி  காத்திருக்கின்றனர். தொடக்க கல்வி இயக்கு னரகத்தின் கணக்கீட்டின் படி 8 ஆயிரத் துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள் ளன. இந்நிலையில், பள்ளி மேலாண்மைக் குழு  மூலம் தற்காலிக ஆசிரியர்கள் 4989 பேர் எடுக் கப்பட்டுள்ளனர் இது சமூக நீதிக்கு எதிரா னது. மேலும், 12 ஆண்டுகளுக்கு முன் தேர்வு  எழுதிய ஆசிரியர்களும் காத்திருக்கின்றனர். எனவே உடனடியாக மேலாண்மைக் குழு மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணி யிடங்களை காலிப் பணியிடங்கள் என அறி விக்க வேண்டும். மேலும் காலியாக உள்ள 8  ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங் களை தேர்வு எழுதி காத்திருக்கும் ஆசிரி யர்கள் மூலம் நிரப்ப வேண்டும் என ஆசி ரியர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித் தனர். இலவச வீட்டுமனை வழங்க கோரிக்கை: அவிநாசி தாலுகா, சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட முறியாண்டபாளையம் பகுதி மக் கள் 70க்கும் மேற்பட்டோர் இலவச வீட்டு மனை வழங்கக் கோரி மனு அளித்தனர். அதே போல வெள்ளகோவில் அருகே உள்ள டாஸ்மாக்கை அகற்ற வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.  இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன், திட்ட இயக்கு நர் (மகளிர் திட்டம்) சாம் சாந்தகுமார், வரு வாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம் உட்பட  அனைத்து அரசு துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.