கோவை, ஜன.6- ஆட்டோ தொழிலும் கார்ப்ரேட் நிறுவ னங்கள் கால் பதிப்பதால் எங்களின் வாழ்வாதா ரம் கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து கூட்டுக்கமிட்டி தலைவர் இரா.செல்வம் கூறுகையில், கோவை மாவட் டத்தில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான ஆட் டோக்கள் இயங்கி வருகின்றன. ஆட்டோ தொழிலை நம்பி மெக்கானிக் உதிரி பாகங்கள் விற்பவர், டிங்கர் வேலை செய்பவர், அப் போல்சரி அடிப்பவர், என நேரிடையாகவும், மறைமுகமாகவும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட் டோரும், அவர்களின் குடும்பங்களும் இத் தொழிலை நம்பி வாழ்ந்து வருகிறோம். கோவை மாவட்டத்தில் பொதுப் போக்குவ ரத்து பலமாக உள்ள நிலையில், அனைத்து பகுதிகளுக்கும் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன. கால் டாக்ஸிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சட்டவிரோத பைக் டாக்ஸி செயல்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த 11 ஆண்டுகளாக அரசு, மீட்டர் கட்டணம் முடிவு செய்யாத காரணத்தால் தற்போது ஆட்டோ தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகி றது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் கடு மையாக பாதித்துள்ளது. இந்நிலையில், இந்த ஆட்டோ தொழிலும் கார்ப்ரேட் நிறுவ னங்கள் உள்ளே நுழைய முயல்கின்றன. புதிய நிறுவனங்கள் மூலம் தினம்தோறும் நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள் புதிதாக ஆர்டிஓ அலுவலகங்கள் மூலம் பதிவு செய் யப்படுகிறது. இதனால், ஏற்கனவே ஆட்டோ தொழிலையே நம்பியுள்ள பல்லாயிரக்கணக் கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதோடு புதிதாக ஆட்டோ தொழிலுக்கு வருபவர்க ளுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, கோவை மாவட்டத்தில் புதிய ஆட்டோக்களுக்கு வழங்கப்படும் பர்மிட் தற்காலிகமாக நிறுத்திட வேண்டும் என தெரி வித்துள்ளோம் என்றார். முன்னதாக இந்த மனு அளிக்கும் இயக் கத்தில், கூட்டு அமைப்பின் தலைவர் இரா. செல்வம் தலைமையில், சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகி த.நாகராஜ், அண்ணா தொழி லாளர் சங்கம் சார்பில் இஸ்மாயில், எஸ்டிடியு சார்பில் ராஜன், எப்ஐடியு சார்பில் ஷாஜகான், முகமது உசேன். சிராஜுதீன் மற்றும் கூட்டுக் கமிட்டி நிர்வாகிகள் திரளானோர் பங்கேற் றனர். சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் முற்றுகை சுற்றுலாத் தலங்களுக்கு கார்ப்பரேட் நிறு வன வாகனங்கள் செல்ல அனுமதிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுற் றுலா வாகன ஓட்டுனர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்களன்று முற்று கையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கார்பெட் நிறுவனங்களின் வாகனங்கள் ரெட் டாக்ஸி, ஓலா, உபர், கோட் டாக்ஸி, மேக் மை ட்ரிப் சவாரி ஆகிய வாகனங்கள் ட்ராப் மட் டுமே செய்ய வேண்டும் இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு கார்ப்பரேட் நிறுவன வாக னங்கள் செல்ல அனுமதிக்க கூடாது. நீலகிரி மாவட்டத்தில் இருந்து எந்த சுற்றுலாப் பய ணிகளும் ஏற்றி செல்லக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் பலமுறை மாவட்ட ஆட்சிய ரிடம் வலியுறுத்தியும், இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்துள்ளோம் என்றனர். 500 க்கும் மேற்பட்ட டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்று கையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உதகை கோட்டாட் சியர் சதீஷ், வட்டார போக்குவரத்து அலுவ லர் தியாகராஜன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு வருகின்ற வியாழக்கிழமை ஆலோ சனை கூட்டம் நடத்தி உரிய முடிவு எடுக்கப்ப டும் என அவர் தெரிவித்ததை அடுத்து சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.