சென்னை,ஜனவரி.05- 2024ஆம் ஆண்டிற்கான அம்பேத்கர், பெரியார் விருதுகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருதுக்கு விடுதலை ராஜேந்திரனும், அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு ரவிக்குமார் எம்.பியும் தேர்வு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் நாளன்று ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கத்துடன் இவ்விருதினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்.